COBRA D Logo Top
www.garudabazaar.com

சிம்பு - பிரியா பவானி சங்கர் நடிக்கும் 'பத்து தல'.. ஷூட்டிங் தமிழ்நாட்ல இந்த ஊர்லயா? அடடே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு & கௌதம் கார்த்திக் நடிக்கும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு தகவல் வெளியாகி உள்ளன.

Silambarasan TR Pathu Thala Movie Shooting at Karaikudi Kovilur

Also Read | எல்லாரும் நல்லா இருக்கனும்..பிள்ளையார்பட்டி கோயிலில் சாமி தரிசனம் செய்த சிம்பு!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

2017 ஆம் ஆண்டு நியோ நோயர் வகைமையில் உருவான இந்த படம் கன்னட சினிமாவில் மிக முக்கிய அந்தஸ்தை பெற்றது. நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதை தான் இந்த படம். சிவராஜ் குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது தான்.

Silambarasan TR Pathu Thala Movie Shooting at Karaikudi Kovilur

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

Silambarasan TR Pathu Thala Movie Shooting at Karaikudi Kovilur

பத்து தல படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில், இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்திலும், மூன்றாவது கட்டப்படிப்பு கன்னியாகுமரியில் நடந்திருந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி பகுதியில் நடந்தது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் கோவிலூரில் நடந்தது. இது தொடர்பான தகவலை நடிகர் டிஜே அருணாசலம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில் வாசலில் நடந்த புகைப்படமும் கோவிலூர் ஊர் மக்கள் மூலம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Silambarasan TR Pathu Thala Movie Shooting at Karaikudi Kovilur

பத்து தல திரைப்படம் இந்த ஆண்டு, டிசம்பர் 14 ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | ட்ரிம் செய்யப்பட்ட "கோப்ரா" படத்தின் நீளம் .. இப்போ DURATION எவ்வளவு? வெளியான தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Pathu Thala Movie Shooting at Karaikudi Kovilur

People looking for online information on Karaikudi Kovilur, Pathu Thala, Pathu Thala Movie Shooting, Silambarasan TR will find this news story useful.