சித்தார்த் சொன்ன பைத்தியம் சேலஞ்ச் - ''ரெண்டு ஃபேன்ஸ்க்குள்ள சண்ட டிரெண்டிங்...''
முகப்பு > சினிமா செய்திகள்'சிவப்பு மஞ்சள் பச்சை' , 'அருவம்' படங்களுக்கு பிறகு நடிகர் சித்தார்த், ஹீரோவாக நடித்திருக்கும் படம் 'டக்கர்'. இந்த படத்தை 'கப்பல்' பட இயக்குநர் கார்த்தி ஜி.கிருஷ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தில் திவ்யான்ஷா கௌசிக், அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிகத்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இன்றைய பைத்தியம் சேலஞ்ச் என்னவென்றால் தென்னிந்திய ரசிகர்கள் #UnrivalledTamilActors Vs #TeluguRealHeroes என்பதை டிரெண்ட் செய்கிறார்கள். இண்டர்நெட்டின் வேஸ்ட். நம்முடைய நாட்டு இளைஞர்கள் தங்களது வாழ்க்கைக்காகவும், இண்டர்நெட் டேட்டாவிற்காகவும் அதிகம் செய்ய வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
Today's #Paithyam challenge in South Indian fans clashing trends is #UnrivalledTamilActors vs #TeluguRealHeroes
🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️
What a waste of the internet! Our country really needs these youngsters to do more with their lives, and their internet data!
— Siddharth (@Actor_Siddharth) January 22, 2020