’விஜய் 65 படத்தை இந்த டைரக்டர் பண்றாரா?’ மாஸ்டர் இணை தயாரிப்பாளர் விளக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 03, 2020 06:28 PM
அட்லி இயக்கிய 'பிகில்' படத்தைத் தொடர்ந்த் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன், மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் போஸ்டரும் டைட்டிலும் டிசம்பர் 31ம் தேதி ரிலீசாகி வரவேற்பை பெற்றது. XB நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மான்ஸ்டர் படத்தின் போஸ்டர் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே வலுத்துள்ளது. இதனால் விஜய் 65 குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான ஜகதிஷ் தன் டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிந்துள்ளார்.
ஒரு வாட்சப் உரையாடலின் Screen Shotஆன அதில், ரசிகர் ஒருவர் விஜயின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்புவது போலவும் அதற்கு ஜகதீஷ், அடுத்த படத்தில் விஜய், இயக்குநர் ஷங்கர் மற்றும் அனிருத்துடன் இணையப்போவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு இது தவறான தகவல் என்று கூறியிருக்கும் ஜகதீஷ், அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
That’s not mine at all. Someone photoshopped.. @itz_chris_off https://t.co/s0LNpM0Cvm
— Jagadish (@Jagadishbliss) January 3, 2020