’ரஜினி தமிழ்நாட்டு மக்களுக்காக இதை செய்ய வேண்டும்…!’ – கமல் வெளிப்படுத்திய விருப்பம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 10, 2020 01:28 PM
ரஜினி-ஏ.ஆர்.முருகதாசின் கூட்டணியில் உருவான ’தர்பார்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் அவருடன் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். லைக்கா நிருவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்த இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார்.
தர்பாரின் ரிலீசுக்கு முன்பாகவே ரஜினியின் அடுத்த படமான ’தலைவர்168’ன் ஷூட் தொடங்கியது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். ரஜினியுடன் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. டி.இமான் இசையமைக்கும் ’தலைவர்168’ன் முதல் ஷெட்யூல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது.
இந்த சூழலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தன் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ரஜினியை டாக் செய்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,’ரஜினி எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் தமிழ்நாடு அவருக்கு உதவி செய்துள்ளது. அவர் பிறந்த இடம் வேறென்றாலும் இன்று அவர் ஒரு பெருமைக்குரிய தமிழன்’ என்று கமல் குறிப்பிட்டுள்ளார். கமல் தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
I will want my friend @rajinikanth to help Thamizh Nadu. Because it has helped him. He is now a proud Thamizhian despite being born elsewhere - #MakkalNeedhiMaiam party President @ikamalhaasan #KamalSpeaks #ReimaginingTamilNadu #MNM
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) January 9, 2020