www.garudabazaar.com
iTechUS

BREAKING: சூப்பர் ஹிட் படத்தின் அடுத்த பார்ட்.. மீண்டும் இணையும் சிபி ராஜ் & சத்யராஜ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சத்யராஜ்.

Sibiraj Sathyaraj again join together for Jacksondurai part 2 Deets

Also Read | ஷங்கர் & அதிதி ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்.. வைரல் PHOTOS

தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்த சத்யராஜ், தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் முதன்மை குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருந்தார். இவரது மகன் சிபி சத்யராஜ் தமிழில் ஹீரோவாக விளங்கி வருகிறார்.

Sibiraj Sathyaraj again join together for Jacksondurai part 2 Deets

ஸ்டூடன்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிபிராஜ் அறிமுகமானார். பின்னர் நடிகர் சத்யராஜ் உடன் ஜோர், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், ஜாக்சன் துரை ஆகிய படங்களில் சிபி நடித்துள்ளார்.

சமீபத்தில் சிபி நடிப்பில் வெளிவந்த மாயோன், வட்டம் ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Sibiraj Sathyaraj again join together for Jacksondurai part 2 Deets

2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஜாக்சன் துரை படத்தில் சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், ராஜேந்திரன் ஆகியோர் நடித்தனர். நடிகர் சத்யராஜ் முதல் முறையாக இந்த படத்தில் பேயாக நடித்திருந்தார்.

Sibiraj Sathyaraj again join together for Jacksondurai part 2 Deets

தரணிதரன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய படத்தில் நடிகர் சிபிராஜ் & சத்யராஜ் இணைந்து நடிக்க உள்ளனர் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தினை நடிகர் சத்யராஜ் தமது நாதாம்பாள் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்க உள்ளார்.

Also Read | துணிவு படத்தின் வெற்றி.. சொந்த ஊரில் இயக்குனர் வினோத் தந்தையை கௌரவித்த பிரபல தியேட்டர்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sibiraj Sathyaraj again join together for Jacksondurai part 2 Deets

People looking for online information on Jacksondurai part 2, Sathyaraj, Sibiraj will find this news story useful.