www.garudabazaar.com
iTechUS

துணிவு படத்தின் வெற்றி.. சொந்த ஊரில் இயக்குனர் வினோத் தந்தையை கௌரவித்த பிரபல தியேட்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு இயக்குனர் H. வினோத்தின் தந்தையை பிரபல திரையரங்க நிர்வாகம் கௌரவித்துள்ளது.

Sakthi cinemas Gudiyatham honored Director H Vinoth father Hari Murthy raj

Also Read | எம்.ஜி.ஆர் முகத்தை நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட நடிகர் விஷால்.. தீயாய் பரவும் வைரல் போட்டோ

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமானவர்  H.வினோத், சமூகவியல் மற்றும் அரசியல் குற்றம் தொடர்பான படங்களை படமாக்க கூடிய வினோத், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர்.  H.வினோத், இயக்கத்தில் சமீபத்தில் அஜித் நடிப்பில் துணிவு வெளியாகி உள்ளது.

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது. 

Sakthi cinemas Gudiyatham honored Director H Vinoth father Hari Murthy raj

'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

Sakthi cinemas Gudiyatham honored Director H Vinoth father Hari Murthy raj

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Sakthi cinemas Gudiyatham honored Director H Vinoth father Hari Murthy raj

இந்நிலையில் இயக்குனர் வினோத்தின் சொந்த ஊரான குடியாத்தம் நகரில் உள்ள பிரபல சக்தி சினிமாஸ் திரையரங்கம் துணிவு படத்தின் இமாலய வெற்றியை ஒட்டி  இயக்குனர் வினோத்தின் தந்தை ஹரி மூர்த்தியை கௌரவித்துள்ளது. தியேட்டர் நிர்வாகம் சார்பில்  வினோத்தின் தந்தை ஹரி மூர்த்திக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தனர்.

Also Read | ஷங்கர் & அதிதி ஷங்கர் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்.. வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Sakthi cinemas Gudiyatham honored Director H Vinoth father Hari Murthy raj

People looking for online information on H Vinoth, Hari Murthy raj, Sakthi cinemas Gudiyatham, Thunivu will find this news story useful.