நடிகை ஸ்ரேயா பகிர்ந்த ஃபோட்டோஸ் வைரல் - அவரது கணவருக்கு குவியும் வாழ்த்து
முகப்பு > சினிமா செய்திகள்சூப்பர் ஸ்டாருடன் 'சிவாஜி', தளபதி விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', விக்ரமுடன் 'கந்தசாமி' என தமிழில் முன்னணி ஹீரோவாக வலம் வந்ததவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
![Shriya Saran's new balcony morning pics go viral | நடிகை ஸ்ரேயாவின் பால்கனி புகைப்படங்கள் வைரல் Shriya Saran's new balcony morning pics go viral | நடிகை ஸ்ரேயாவின் பால்கனி புகைப்படங்கள் வைரல்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/shriya-sarans-new-balcony-morning-pics-go-viral-photos-pictures-stills.jpg)
நடிகை ஸ்ரேயா ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆன்ட்ரேய் கொஸ்சேவ்( Andrei Koscheev) என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது நடிகை ஸ்ரேயா நடிப்பில் 'நரகாசூரன்', 'சண்டக்காரி' உள்ளிட்ட படங்கள் வெளிவரக்காத்திருக்கின்றன.
இந்நிலையில் நடிகை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் ''இந்த வித்தியாசமான காலகட்டங்களில் உங்களுக்காக எங்கள் சிரிப்பை வழங்குகிறோம். இதில் இருந்து உங்கள் சந்தோஷத்தை கண்டுபிடிக்க முடியும். பால்கனியில் என்னுடைய காலைப்பொழுது'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவிற்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல ஒளிப்பதிவாளர் அனூப் செய்துள்ள கமெண்ட்டில் , நீங்கள் நன்றாக கற்றுக்கொண்டுள்ளீர்கள். இந்த புகைப்படங்களை சிறப்பாக எடுத்துள்ளீர்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.