www.garudabazaar.com

குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய நடிகை பூமிகா.. வைரலாகும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா சாவ்லா.

Bhumika Chawla Diwali Celebration with Family

Also Read | நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம்.. சென்னையில் எங்கே? எப்போ? அவரே வெளியிட்ட அறிவிப்பு!

டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் தளபதி விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் அறிமுகமானவர். பின் ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'சில்லுனு ஒரு காதல்' திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ரொமான்டிக் திரைப்படமாகும்.

Bhumika Chawla Diwali Celebration with Family

இந்த படத்தை என். கிருஷ்ணா இயக்கினார். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மற்றும் பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர், ஷ்ரியா சர்மா, சுகன்யா, வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இந்தப் படத்தின் மூலம் 5 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் பூமிகா சாவ்லா.

Bhumika Chawla Diwali Celebration with Family

பூமிகா சாவ்லா சமீபத்தில் தெலுங்கில்  பிளாக்பஸ்டர் படங்களான சீதா ராமம்,  கோபிசந்தின் 'சீட்டிமார் ' மற்றும் விஸாக் சென்னின் 'பாகல்' படங்களில் நடித்திருந்தார் . தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார்.

Bhumika Chawla Diwali Celebration with Family

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகை பூமிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 2007 ஆம் ஆண்டு யோகா பயிற்சி ஆசிரியர் பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

Also Read | நடிகை அசின் மகளின் பிறந்தநாள் விழா.. குழந்தையின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து!

Bhumika Chawla Diwali Celebration with Family

People looking for online information on Bhumika chawla, Bhumika Chawla Diwali Celebration will find this news story useful.