www.garudabazaar.com

கையில் துப்பாக்கியுடன் செம்ம ஸ்டைலாக ராமராஜன்.. வைரலாகும் 'சாமானியன்' புதிய போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தீபாவளியை முன்னிட்டு நடிகர் ராமராஜன் நடிக்கும் சாமானியன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Actor Ramarajan Saamaniyan Movie New Diwali Poster Released

நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். மக்கள் நாயகன் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர்.

ராமராஜன், 1977 ஆம் ஆண்டு தொடங்கி சிறிய வேடங்களில் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். மண்ணுக்கேத்த பொண்ணு (1985) மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1986 இல் வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படத்தில் கதாநாயகனாக தனது அறிமுகம் ஆனார். கிராமம் சார்ந்த  திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இவரது கரகாட்டகாரன் (1989) திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. திரையரங்குகளில் இந்த படம் 400 நாட்கள் ஓடியது.  கரகாட்டக்காரன் படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களில் மிகவும் முக்கியமான படமாகும்., மேலும் பல படங்களும் ராமராஜன் நடிப்பில்  நூறு நாட்கள் ஓடி  வசூலில் சாதனை புரிந்தவை‌.

அரசியலிலும் ஈடுபாடு கொண்ட ராமராஜன், 1998 ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 12வது மக்களவைக்குத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராமராஜன், 2001 ஆம் ஆண்டு சீறி வரும் காளை படத்திற்கு பிறகு 2012 ஆம் ஆண்டு 'மேதை' படத்தில் நடித்து இருந்தார்.

தற்போது மீண்டும் ஹீரோவாக ராமராஜன் நடிக்க உள்ளார். ராமராஜன் நடிப்பில் 45வது படமாக சாமானியன் படம் உருவாகும் என சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது.   இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் நடிகர் ராமராஜன் உடன் எம்.எஸ். பாஸ்கர், ராதா ரவி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். ராகேஷ் இப்படத்தினை இயக்க உள்ளார். மதியழகன் இப்படத்தினை தயாரிக்கின்றார். இப்படம் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Ramarajan Saamaniyan Movie New Diwali Poster Released

இந்நிலையில் இன்று தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. கையில் துப்பாக்கியுடன் நடிகர் ராமராஜன்  போஸ்டரில் கம்பீரமான லுக்கில் தோன்றியுள்ளார். மேலும் நடிகர்கள் ராதா ரவி & எம். எஸ். பாஸ்கரும் போஸ்டரில் தோன்றியுள்ளனர்‌.

Actor Ramarajan Saamaniyan Movie New Diwali Poster Released

People looking for online information on Ramarajan, Saamaniyan will find this news story useful.