www.garudabazaar.com

தீபாவளி கொண்டாடிய பிரியங்கா சோப்ரா.. குழந்தையின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு ‌வாழ்த்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியங்கா சோப்ரா தனது  குடும்பத்துடன்  தீபாவளி கொண்டாடிய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Priyanka Chopra Celebrate Diwali with Family in America

Also Read | VIDEO: ராஜூ முருகன் இயக்கும் புதிய படம்.. கார்த்தி கேரக்டர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 83 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்தது.  இந்த வருட துவக்கத்தில் வாடகைத்தாய் மூலம் பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த குழந்தைக்கு மால்தி என பெயரிட்டனர். குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதாவது பிரியங்கா சோப்ரா பதிவிடுவார். ஒரிரு முறை குழந்தையின் புகைப்படத்தை மறைத்து வெளியிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கணவர் நிக், மகள் மால்தியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "எல்லாருக்கும் அன்பு, அமைதி, செழிப்புமிக்க வளர்ச்சி கிடைக்க வாழ்த்துகள். உண்மையிலேயே நன்றியுணர்வு நிறைந்த இதயத்திலிருந்து, உங்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனது கொஞ்சம் தாமதமாக வாழ்த்துக்கு மன்னிக்கவும்." என கூறியுள்ளார்.

Also Read | VIDEO: "இது ஒரு படிப்பினை.. இதே கருத்தை நான் பேசியிருக்கேன்" - சர்தார் படம் பற்றி சீமான்!

தொடர்புடைய இணைப்புகள்

Priyanka Chopra Celebrate Diwali with Family in America

People looking for online information on America, Diwali, Priyanka Chopra, Priyanka Chopra Celebrate Diwali will find this news story useful.