"கிண்டல் செஞ்சு எதையும் பதிவு பண்ணி வெக்காதீங்க".. ஷிவினின் கோரிக்கையும் விளக்கமும்! Bigg Boss 6
முகப்பு > சினிமா செய்திகள்பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
Also Read | நீங்க நியாயம் ஆனவன் மாதிரியும் மத்தவங்க.. புது ரவுண்டில் அசிம் Vs விக்ரமன்.. மீண்டும் மீண்டுமா?
இதற்கு அடுத்தபடியாக, தற்போது பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்த வண்ணம் உள்ளனர். முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
இப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. அனைத்து போட்டியாளர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் வருகை தந்ததால் பிக் பாஸ் வீடே இந்த வாரம் அமர்க்களமாக மாறி இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் கதிரவனின் கேர்ள் பிரண்ட் ஸ்னேகா, பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தர, இதனைக் குறிப்பிட்டு சில போட்டியாளர்கள் ஷிவினை ஜாலியாக கிண்டல் செய்து பேசியும் வந்தனர். என்னதான் கதிரவன், “ஸ்னேகா ஃப்ரண்டுதான்” என சொன்னாலும், ஹவுஸ்மேட்ஸின் ரியாக்ஷன் நம்பிட்டோம் என்பது போலவே இருந்தது.
கூடுதலாக கதிரவனின் அம்மா, “ஷிவினும் கதிரவனும் ஸ்கூல் டாஸ்க் மாறுவேடத்தில் ஒரே மாதிரி இருந்தார்கள் (அண்ணன் தங்கை போல்)” என்று சொன்னதையும், “ஷிவின் என் மகள் மாதிரி” என கதிரவனின் அம்மா சொன்னதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் ஸ்னேகா - கதிரவன் புரிதலை, கதிரவனின் பெற்றோரும், ஸ்னேகாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வெளிப்படுத்த நினைத்திருந்தால் அதை அதிநுட்பமாகவும் மிக நாகரிகமாகவும் அவர்கள் செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதனிடையே அமுதவாணனிடம் பேசிய விக்ரமன், அவரது உணர்வை அவர் பார்த்துக் கொள்வார், நாம் நடுவே சென்று காமெடி என்ற பெயரில் எதுவும் செய்ய வேண்டாம் என்று நாகரிகமாக அறிவுறுத்துகிறார். அதன் பின்னர் விக்ரமனிடம் பேசிய ஷிவின், “அவங்க(கதிரவன்) past பற்றி சொல்லியிருந்தார். முன்பு ஒரு உறவு இருந்தததா சொன்னார். ஆனால் இதை பற்றி சொல்லல. பெஸ்ட் பிரெண்டு என சொல்றாரு” என்று கொஞ்சம் தடுமாற்றமாக கூறிய ஷிவின், அமுதுவிடம் பேசும்போது, “வெளில எனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு.. அவங்களுக்கும் (கதிரவன்) ஒரு வாழ்க்கை இருக்கு. எனவே இத பத்தி அதிகமா கிண்டல் செஞ்சு பதிவு பண்ணி வெக்காதீங்க” என்று ஜாலியாக எச்சரித்தார்.
எனினும்,‘கண்ணே கலைமானே..’ பாடலை பாடி ஷிவினை தேற்றிய, அமுதவாணன் “இங்கயே ரொம்ப நாள் அடைபட்டு இருக்கோம்... வெளில போய் வேற முகங்களைப் பார்த்தா சரியாயிடும்” என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது. இத்துடன் இந்த விஷயத்தை பற்றிய புரிதல் அனைவருக்குமே வந்திருக்கும் என ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
Also Read | விக்ரமன் பேச்சை கேட்டு மைனா சொன்ன விஷயம்.. என்னங்க சாபம்-லாம் விடுறாங்க😅..!
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Myna Nandhini Talks About Vikraman Future Wife In BB House
- Vikraman Azeem And Amudhavanan Speech In New Task Bigg Boss
- Rachitha Got Angry While Amudhu And Vikraman Talks About Shivin
- Azeem Friend Wish Vikraman Amudhavanan And Housemates Reaction
- Vikraman Father To Azeem About His Angry Speech Bigg Boss
- Vikraman Advice Amudhavanan In Shivin Issue Bigg Boss House
- Vikramans Father Wishes For Shivin Success Bigg Boss 6 Tamil
- Azeem And Kathiravan About Shivin Wig Bigg Boss House
- Vikraman Father Motivates Shivin Bigg Boss 6 Tamil
- ADK Father About Shivin To Amudhavanan Bigg Boss House
- Azeem Self About His Play In Bigg Boss 6 Tamil பிக்பாஸ் அசீம்
- ADK Sing A Song For Shivin Housemates Joints To Him In BB6
தொடர்புடைய இணைப்புகள்
- "Kamal Sir நீங்க இந்த வயசுல இவ்ளோ விஷயம் பண்ணுவீங்கனு நினைக்கல"💥 Udhayanidhi Stalin பெருமிதம்😇
- அழுதுட்டே வெளிய போன SHIVIN 😢 KATHIR GIRLFRIEND வந்தது தான் காரணமா?
- 🔴LIVE: "Top 5 Vikraman, Shivin, Azeem, Amudha, Rachita-தானா?" Comment Your Choice 🔥Fatman Review💥
- 🔴LIVE: "Myna, நீ Bigg Boss-க்கு லாய்க்கு இல்ல" திட்டி தீர்த்த Yogi😳 தோலுரிக்கும் Fatman Review
- AZEEM மாதிரி பேசி அசத்திட்டாரு😂... Bigg Boss வீட்டை சிதறவிட்ட Amudhavanan மகன்
- Kamal & Maniratnam Project Ready💥 உலகநாயகனை Confuse பண்ண Stunt Masters😅 Vikram 100
- 🔴LIVE: "செருப்பால அடிச்சுட்டு Congrats-அ" கடுப்பான Rachitha 😭 தோலுரிக்கும் Fatman Review
- Bigg Boss Task, எங்களுக்கே வெறுப்பா இருக்கும் 😟டேய் எங்க இருந்து டா வாரீங்க? - Janany
- "KAMAL-அ எல்லாரும் மறந்துட்டாங்க"😥டக்குனு Emotional ஆன Kamal Haasan😳 Vikram 100
- 🔴LIVE: அழுகையுடன் Dhana OUT சரியா? தப்பா?...கண்கலங்கிய Kamal 😭 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: Vikraman, Azeem மோதல் 😡 தப்பா பேசினதுக்கு கண்டித்த Kamal 🔥 தோலுரிக்கும் Fatman Review
- 🔴LIVE: கொல காண்டில் Azeem 😡 "Vikraman கட்ட பஞ்சாயத்து வேல இங்க வேணாம்" 🔥 தோலுரிக்கும் Fatman Review