நாளுக்கு நாள் மிக வேகமாக பரவிவரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தற்போது இந்தியா மட்டுமின்றி உலகையே மிகவும் அச்சுறுத்தி வருகின்றது. இந்நிலையில் மக்களுக்கு உதவ அநேக சமூக ஆர்வலர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகையான ஷிகா மல்ஹோத்ரா கொரோனா வைரஸ் பரவி வருவதால் சேவை செய்யும் பொருட்டு தனது நர்ஸ் வேலையை தொடர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள வர்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் படித்து பட்டம் பெற்ற இவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக தனது வேலை தொடங்கியுள்ளார்.
இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “வர்த்தமான் மஹாவீர் மருத்துவக் கல்லூரியில் முறைப்படி மருத்துவம் படித்த நான் 5 வருடம் மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஒரு நடிகையான என்னை உற்சாகப்படுத்தியது போன்று இந்த நர்ஸ் பணியிலும் தன்னை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.