"என் குடும்பத்தை விட்ருங்க..." சனம், தர்ஷன் பற்றி முதன் முறையாக மனம் திறந்த ஷெரின்
முகப்பு > சினிமா செய்திகள்நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஷெரின் முதன்முறையாக தன் மீதான விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக மனந்திறந்து பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், ''கடந்த ஒரு மாதமாக என்னைப் பற்றி அதிகம் பேசப்பட்டுவிட்டது. என்னை யாராவது தாக்கிப் பேச வேண்டும் என்றால் அதை செய்யுங்கள். ஆனால் என்னுடைய குடும்பத்தை விட்டுவிடுங்கள். அமைதியாக இருப்பதை என்னுடைய பலவீனமாக நினைக்க வேண்டாம். இந்த விவகாரத்தில் தொடர்பில்லாததால் தான் பேசாமல் இருக்கிறேன்.
இரண்டு பேர் பிரேக்கப் செய்து கொள்வதை விட முக்கியமான விஷயங்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. இந்த விவகாரத்தில் எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய அதிகாரப்பூர்வ அறிக்கை. இதைப்பற்றிய கேள்விகளுக்கோ, விமர்சனங்களுக்கோ இனி நான் பதிலளிக்க மாட்டேன்,'' என தெரிவித்திருக்கிறார்.