'மாஸ்டர்' ஆடியோ லான்ச் போறீங்களா?... கேள்வி கேட்ட ரசிகர்... 'பிரபல' நடிகரின் பதில் இதுதான்!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறமைகளுடன் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை கொண்டிருக்கும் படைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் பார்த்திபன்.

இவருடைய படங்கள் அனைத்தும் படைப்பாற்றல் கொண்டதாகவும், சமூக தாக்கம் நிறைந்ததாகவும், கருத்துக்களை உள்ளடக்கியதாகவும் இருக்கும். நடிப்பிலும் தனது திறமையை அழகாக வெளிப்படுத்த தெரிந்தவர்.
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பார்த்திபன், கார்த்தி நடமாடும் பாடலை 'வாத்தி கமிங்' பாடலுக்கு நடனம் ஆடுவது போல மிக்ஸ் செய்து வெளியிட்டுருந்தார். அதில், '' அண்ணா! நாளைக்கு மாஸ்டர் ஆடியோ லாஞ்ச் போறீங்களா?,'' என்று கேட்டிருந்தார். பதிலுக்கு பார்த்திபன், ''Master-க்கும், mr vijai-யின் masterpiece ஆக்க உருவாக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் தயாரிப்பாளர் Lalith-க்கும் வாழ்த்துக்கள்,'' என 'மாஸ்டர்' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Master-க்கும், mr vijai-யின் masterpiece ஆக்க உருவாக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கும் தயாரிப்பாளர் Lalith-க்கும் வாழ்த்துக்கள். https://t.co/JhfJPwZVfn
— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 14, 2020