www.garudabazaar.com

ஷங்கர் & அதிதி ஷங்கர் குடும்பத்துடன் சிக்கிமில் சுற்றுலா.. ரசிகர்களிடம் வைரலாகும் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை அதிதி ஷங்கர்  & இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலா சென்றுள்ளனர்.

Shankar with Aditi Shankar Viral Vacation Photos

Also Read | பொங்கலுக்கு வர்றார் அஜித்!.. சென்சார் ஆன 'துணிவு'.. ரன்னிங் டைம் எவ்வளவு?.. முழு தகவல்

இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளிவந்த விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.  இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.  யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்தார். இந்த படத்தில்  ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். 

Shankar with Aditi Shankar Viral Vacation Photos

விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை அதிதி ஷங்கர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் .

சமீபத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு 9 நாளுக்கு 9 தீமில் அதிதி ஷங்கர் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்.

மேலும் பிரபல ஜவுளி நிறுவனத்தின் தீபாவளி விளம்பர படத்தில் கூட நடிகை அதிதி ஷங்கர் நடித்திருந்தார். அதிதி ஷங்கருடன் நடிகை ராதிகா சரத்குமாரும் அந்த விளம்பரத்தில் தோன்றி இருந்தார்.

Shankar with Aditi Shankar Viral Vacation Photos

அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Shankar with Aditi Shankar Viral Vacation Photos

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகருக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை அதிதி ஷங்கர் பகிர்ந்துள்ளார். இயக்குனர் ஷங்கர், அவரது மனைவி ஈஸ்வரி & மகன் அர்ஜித் ஆகியோர் இந்த சுற்றுலாவில் அங்கம் வகித்தனர். மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் இந்த சுற்றுலாவில் இடம் பெறவில்லை. இதனால் அவரை மிஸ் செய்வதாக அதிதி ஷங்கர் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Shankar with Aditi Shankar Viral Vacation Photos

இயக்குனர் ஷங்கர் தற்போது கமல் நடிப்பில் இந்தியன் 2 & ராம் சரண் நடிப்பில் RC 15 படங்களை இயக்கி வருகிறார்.

Also Read | அஜித் நடிக்கும் 'துணிவு'.. இந்திய அரசின் சென்சார் போர்டால் திருத்தப்பட்ட 13 இடங்கள்..

ஷங்கர் & அதிதி ஷங்கர் குடும்பத்துடன் சிக்கிமில் சுற்றுலா.. ரசிகர்களிடம் வைரலாகும் PHOTOS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shankar with Aditi Shankar Viral Vacation Photos

People looking for online information on Aditi Shankar, Aditi Shankar Vacation Photos, Shankar, Shankar with Aditi Shankar will find this news story useful.