www.garudabazaar.com

RC 15 பட ஷுட்… குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியம்… ஹேப்பி mode-ல் இயக்குனர் ஷங்கர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் RC15 படத்தைப் பற்றிய முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Shankar take a break from RC15 for his family function

Also Read | BREAKING: SR பிரபு தயாரிப்பில் ஜீவா, பிரியா பவானி சங்கர்… வெளியான shooting அப்டேட்

அடுத்தடுத்து பிற மொழிகளில் ஷங்கர்…

தமிழின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ளார்.  ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை அடுத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

RC 15 படத்தின் கதாநாயகியாக நடிகை  கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர்களுடன் அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல்முறையாக ஷங்கர் படத்துக்கு அவரால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட தமன் இசையமைக்கிறார். இந்த படத்துக்குப் பின்னர் அவர் ரண்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.

Shankar take a break from RC15 for his family function

RC 15 படப்பிடிப்பு

இந்த படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த படப்பிடிப்பை இயக்குனர் ஷங்கர் நிறைவு செய்து சென்னை திரும்பியுள்ளார்.

Shankar take a break from RC15 for his family function

தற்காலிக break…

இந்நிலையில் கடந்த இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு திருமணம் எளிமையாக நடந்தது. அப்போது கோவிட் கட்டுபாடுகள் இருந்ததால் திரையுலகினரை அதிகளவில் அழைக்கவில்லை. இதையடுத்து இப்போது இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் வரும் மே 1 ஆம் தேதி விமரிசையாக மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதை முன்னிட்டு ஷங்கர் இப்போது சினிமா வேலைகளுக்குக் கொஞ்சம் பிரேக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் RC 15 படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Shankar take a break from RC15 for his family function

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

RC 15 பட ஷுட்… குடும்பத்தில் நடக்கும் நல்ல காரியம்… ஹேப்பி MODE-ல் இயக்குனர் ஷங்கர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shankar take a break from RC15 for his family function

People looking for online information on RC15 Movie, RC15 Movie Updates, Shankar will find this news story useful.