www.garudabazaar.com

BREAKING: SR பிரபு தயாரிப்பில் ஜீவா, பிரியா பவானி சங்கர்… வெளியான shooting அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான ஜீவா அடுத்து நடிக்கும் படம் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

Jiiva and priya bhavani Shankar movie shoot started today

Also Read | கின்னஸ் சாதனை நடிகர் ’டிஷ்யூம்‘ பக்ரு… லாரியோடு கார் மோதல்… அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

ஜீவா….

தன்னுடைய திரைப் பயணத்தில், ராம், கற்றது தமிழ், ஈ போன்ற சீரியஸான பரிணாமத்திலான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை கவனிக்க வைத்தவர் ஜீவா.  அதே நேரத்தில் கலகலப்பான சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை, கோ உள்ளிட்ட கமர்ஷியல் படங்களிலும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். தற்போது அவர் சுந்தர் சி இயக்கத்தில் ஜெய்யுடன் பெயரிடப்படாத படம், வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Jiiva and priya bhavani Shankar movie shoot started today

பிரியா பவானி சங்கர்…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலமாக கவனம் ஈர்த்தார். சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் இருந்தனர். பின்னர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாஸ்டல் திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

Jiiva and priya bhavani Shankar movie shoot started today

ஜீவா- பிரியா பவானி சங்கர்- எஸ் ஆர் பிரபு…

இந்நிலையில் இப்போது ஜீவா மற்றும் பிரியா பவானிசங்கர் முதல் முறையாக இணையும் படத்தை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரிசையாக பல வெற்றிப்படங்களை தயாரிக்கும் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாக் உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.

Jiiva and priya bhavani Shankar movie shoot started today

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BREAKING: SR பிரபு தயாரிப்பில் ஜீவா, பிரியா பவானி சங்கர்… வெளியான SHOOTING அப்டேட் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Jiiva and priya bhavani Shankar movie shoot started today

People looking for online information on Jiiva, Jiiva and priya bhavani Shankar movie, Jiiva and priya bhavani Shankar movie Updates, Priya Bhavani Shankar will find this news story useful.