www.garudabazaar.com

”வளச்சு வளச்சு எடுத்தாரு”… ”டப்பிங்ல பாக்கும்போது”… பிரியா பவானி சங்கரின் ‘HOSTEL’ அனுபவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஷோக் செல்வன் சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் ஹாஸ்டல் எனும் புதிய திரைப்படத்தின் பரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

Actress priya bhavani Shankar speech in hostel movie stage

Also Read | “தமிழணங்கு”… “பெருமைமிகு தமிழன்”… - ஒரே post-ல் தெறிக்கவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் & யுவன்

ஹாஸ்டல் boys only….

நடிகர் அஷோக் செல்வனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஓ மை கடவுளே’ மற்றும் மன்மத லீலை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து அவர் அடுத்தடுத்து சில படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். இந்நிலையில் அஷோக்செல்வன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.

முன்னர், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரபல விஜய் டிவி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் அறியப்பட்ட யோகி இடம்பெற்றிருக்கிறார். முன்னரே வெளியாகி இருக்க வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக தாமதமாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். போபோ சஷி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

Actress priya bhavani Shankar speech in hostel movie stage

பிரியா பவானி சங்கரின் ஜாலி பேச்சு…

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட படத்தின் நாயகி பிரியா பவானி சங்கர் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் பற்றி பேசும் போது “இந்த படத்தின் செட் ஒரு குழப்பமான செட். அங்கே இங்கே சென்றால் நாம் காணாமல் போய்விடுவோம். அதில் எங்களை வளைத்து வளைத்து ஷூட் செய்தார். டப்பிங்கில் என்னைப் பார்க்கும்போது எனக்கே அழகாக இருந்தது” எனக் கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார்.

Actress priya bhavani Shankar speech in hostel movie stage

சீரியல் to முன்னணி நடிகை…

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலமாக கவனம் ஈர்த்தார். சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் இருந்தனர். பின்னர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

Actress priya bhavani Shankar speech in hostel movie stage

Also Read | “நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே”…. நயனுடன் ரொமான்ஸ்.. விக்னேஷ் சிவனின் வைரல் story !

தொடர்புடைய இணைப்புகள்

Actress priya bhavani Shankar speech in hostel movie stage

People looking for online information on Ashok Selvan, Hostel Movie, Priya Bhavani Shankar, Sumanth Radhakrishnan will find this news story useful.