www.garudabazaar.com

கின்னஸ் சாதனை நடிகர் ’டிஷ்யூம்‘ பக்ரு… லாரியோடு கார் மோதல்… அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து அறியப்படும் நடிகராகியுள்ளார் கின்னஸ் பக்ரு.

Actor guinnes pakru met an accident in kerala

Also Read | காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துல ஸ்ரீசாந்த்.. இந்த ரோல்ல தான் நடிக்கிறாரா?

கின்னஸ் பக்ரு…

கின்னஸ் பக்ரு என்று ரசிகர்களால் அறியப்படும் அஜய் குமார் தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து பிரபலமானவர். மாற்றுத்திறனாளியான இவர் ஒரு முழு நீளத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் படைத்துள்ளார். வினயன் இயக்கிய அற்புத தீவு என்ற மலையாளத் திரைப்படத்தில் கதாநாயக வேடத்தில் நடித்தார். பின்னர் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டது.

Actor guinnes pakru met an accident in kerala

பன்முகத் திறமை…

பக்ரு தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் குட்டியும் கோலும் என்ற படத்தை இயக்கியும் பேன்ஸி ட்ரஸ் என்ற படத்தைத் தயாரித்தும் உள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வீரபக்ரு என்ற திரைப்படம் மலையாளத்தில் ரிலீஸானது.

Actor guinnes pakru met an accident in kerala

தமிழில் கலக்கிய படங்கள்…

பக்ரு தமிழில் ஜீவா நடிப்பில் சசி இயக்கிய ‘டிஷ்யூம்’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடித்த அமிதாப் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அதன் பின்னர் விஜய்யுடன் காவலன், சூர்யாவுடன் ஏழாம் அறிவு ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக அவர் நடிப்பில் ஆரியன் என்ற படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது.

Actor guinnes pakru met an accident in kerala

பக்ருவின் கார் விபத்து…

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பக்ரூ சென்ற கார் எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கோ குடும்பத்தினருக்கோ எந்த பாதிப்பும் இல்லை. சீட் பெல்ட் உள்ளிட்ட பாதுகாப்புகளை சரியாக மேற்கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லாமல் தப்பியதாக அவர் கூறியுள்ளார். விபத்து நடந்து 10 நாட்களுக்குப் பிறகு பக்ரு இதைப் பற்றி அறிவித்துள்ளார். இப்போது நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

கின்னஸ் சாதனை நடிகர் ’டிஷ்யூம்‘ பக்ரு… லாரியோடு கார் மோதல்… அவரே பகிர்ந்த அதிர்ச்சி தகவல்! வீடியோ

Actor guinnes pakru met an accident in kerala

People looking for online information on Guinness Pakru, Guinness Pakru met an accident will find this news story useful.