திரையுலகுக்கு பேரிழப்பு.. அனிருத் -தின் தாத்தா... இசையமைப்பாளர் & இயக்குனர் SV ரமணன் மறைவு.!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பழம்பெரும் இயக்குனர் எஸ்.வி.ராமணன் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார்.

Also Read | Lakshmi Vasudevan : “அந்த ஃபோட்டோஸ் என் Whatsapp -ல அத்தன பேருக்கும் அனுப்பி”.. சீரியல் நடிகை உருக்கம்.!
பிரபல இயக்குனர் & இசையமைப்பாளர், பின்னணி குரல் கொடுப்பவர் என பன்முகத் திறமை வாய்ந்தவர் எஸ்.வி.ராமன்.
பிரபல தயாரிப்பாளர், இயக்குனர், கே சுப்பிரமணியம் மகனான எஸ்வி ரமணன் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.
எஸ்.வி.ரமணன், இன்று மாலை 3 மணிக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன. அஞ்சலி செலுத்த விரும்புவோர் - 84 சாந்தோம், ஹை ரோடு, ஆர்.ஏ.புரம், சென்னை. என்ற முகவரிக்கு நேரில் அஞ்சலி செலுத்தலாம்.
எஸ்.வி. ரமணின் மறைவுக்கு திரை பிரபலங்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரமணனுக்கு மனைவியும் இரண்டு மகள்கள் உள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இவருடைய பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.வி. ரமணன் தூர்தர்ஷனுக்காக தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அகில இந்திய வானொலியில் பல விளம்பரங்கள் இவர் குரலில் வெளியாகி உள்ளன. இப்பொழுதும் பிரபலமான ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரம் இவருடைய குரலில் வெளியானதே.
Also Read | மாலத்தீவில் அமலாபால் வேற லெவல் போட்டோஷூட்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்