www.garudabazaar.com

முதல்முறையாக ஷாருக்கானுக்கு ஜோடியான பிரபல தமிழ் சினிமா நடிகை..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: பிரபல தமிழ் சினிமா ஹீரோயின் ஷாருக்கானுக்கு ஜோடியாக உள்ளார்.

Taapsee Pannu Joining with Shah Rukh Khan for Dunki

Also Read | SK20 பட தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்.. சிவகார்த்திகேயனின் உருக்கமான Post

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் உள்ளனர். ஷாருக்கான் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு சென்னை எக்ஸ்பிரஸ் ப்டமும், 2014 ஆம் ஆண்டு வெளியான ஹாப்பி நியூ இயர் படமும் கடைசியாக 2015ல்  வெளியான தில்வாலே படமும் வெற்றி பெற்றது. தொடர் வெற்றிகளால் உச்சத்தில் இருந்த ஷாருக்கானுக்கு, ரயிஸ், பேன், ஜீரோ படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்தன.

இதனால் சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். பல இயக்குனர்களிடம் கதை கேட்டார். தமிழில் வெற்றிமாறன், அட்லி ஆகியோர் கதை சொல்ல, அட்லி அடுத்த படத்தை இயக்க ஒப்பந்தமானார். அதே போல் ராஜ்குமார் ஹிரானியுடன் ஒரு படமும் கமிட் ஆனார்.

Taapsee Pannu Joining with Shah Rukh Khan for Dunki

இதில் ராஜ்குமார் ஹிரானியின் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை தற்போது ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ், ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

Taapsee Pannu Joining with Shah Rukh Khan for Dunki

முன்னாபாய் MBBS,  3 இடியட்ஸ், பிகே, சஞ்சு உள்ளிட்ட பல சூப்பர் மெஹா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இந்திய சினிமாவின் டாப் MOST WANTED இயக்குனர் ஆவார். இந்த படத்திற்கு Dunki  என பெயரிடப்பட்டுள்ளது. Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி  நடிக்கவுள்ளார்.  நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம், ஆரம்பம், வந்தான் வென்றான், கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்தவர். ஹிந்தியில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

Taapsee Pannu Joining with Shah Rukh Khan for Dunki

2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு Dunki திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | BEAST -ஐ அடுத்து #THALAIVAR169.. ட்விட்டரில் இயக்குனர் நெல்சன் செய்த தெறிக்கவிடும் செயல்..!

தொடர்புடைய இணைப்புகள்

Taapsee Pannu Joining with Shah Rukh Khan for Dunki

People looking for online information on Dunki Movie, Shah Rukh Khan, Taapsee Pannu will find this news story useful.