www.garudabazaar.com
iTechUS

பிப்.6 முதல் பாரதி கண்ணம்மா 2.. அதே கதையா? புதிய கதையா? கலர்ஃபுல் ப்ரோமோ.. Bharathi Kannamma 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதி அத்தியாயங்கள் அண்மையில் நடந்து முடிந்ததை அடுத்து, முதல் சீசன் முடிவு பெற்றது.

Serial Bharathi Kannamma Season 2 Promo Story Plot

Image Credit : Vijay Television

Also Read | தேதி மாற்றப்பட்ட ஷங்கர் - ராம்சரண் இணையும் RC15 படத்தின் Song ஷூட்..? இதுதான் காரணமா?

முதல் சீசன் கதைப்படி, கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்த டாக்டர் பாரதி, வெண்பாவின் சூழ்ச்சியில் கண்ணம்மாவையும் தன் குழந்தைகளையும் ஏற்க மறுத்த நிலையில், இவர்களின் 2 குழந்தைகளும் வளர்ந்து ஆளுக்கொருவரால் வளர்க்கப்பட்டு, இறுதியில் அனைவருக்கும் பாரதி & கண்ணம்மா தான் குழந்தைகளின் பெற்றோர் என்கிற உண்மை தெரிந்தது. வெண்பாவின் சூழ்ச்சியும் உடைந்தது.

Serial Bharathi Kannamma Season 2 Promo Story Plot

Image Credit : Vijay Television

அதன் பின்னர் பாரதிக்கு ஒரு சண்டையில் நினைவுகள் செத்துப்போக, பழைய வாழ்க்கையை நினைவூட்டி கண்ணம்மா அவரை மீட்டெடுத்தார். இதனிடையே இவர்கள் விவாகரத்து பெற்றிருந்ததால், பிறகு இருவருக்கும் மீண்டும் திருமணம் அரங்கேற சீரியல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த சீரியலின் 2வது சீசனில் கண்ணம்மாவாக, கடைசியாக நடித்து வந்த வினுஷாவும், பாரதியாக இம்முறை ரோஜா சீரியல் ஹீரோவான சிபு சூர்யனும் நடிக்கின்றனர்.

Serial Bharathi Kannamma Season 2 Promo Story Plot

Image Credit : Vijay Television

முதல் சீசனில் இருந்த அதே நடிகை இதிலும் பாரதியின் அம்மாவாக வருகிறார். முதல் சீசனில் கண்ணம்மாவின் அம்மாவாக (இறந்து போன கேரக்டராக) வந்த நடிகை தீபா இதில் கண்ணம்மாவின் அம்மாவாக உயிருடன் வருகிறார்.

Serial Bharathi Kannamma Season 2 Promo Story Plot

Image Credit : Vijay Television

இது தொடர்பான ப்ரோமோவில் இருந்து அதே கேரக்டர்களின் பெயர்களை கொண்டு மாறுபட்ட கதைக்களத்தில் இந்த சீசன்  வரவிருப்பதாக தெரிகிறது. இதேபோல் கதை கிராமத்து கதைக்களத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

Serial Bharathi Kannamma Season 2 Promo Story Plot

Image Credit : Vijay Television

திங்கள் முதல் வெள்ளி வரை பாரதி கண்ணம்மா சீரியலின் 2வது சீசன் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Varisu : மெகா பிளாக் பஸ்டர்..!! ‘வாரிசு’ உலகளாவிய கலெக்‌ஷன் ரிப்போர்ட்..! வெளியான அறிவிப்பு.!

மேலும் செய்திகள்

Serial Bharathi Kannamma Season 2 Promo Story Plot

People looking for online information on Bharathi Kannamma 2, Bharathi Kannamma New Promo, Bharathi Kannamma Season 2, Bharathi Kannamma Season 2 Story Plot will find this news story useful.