www.garudabazaar.com

"தப்பிச்சது 2வது வாழ்க்க தான்".. சென்னை தீவிபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் உட்பட 30 பேர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 06 பிப்ரவரி 2022:- சீரியல் நடிகர் ஸ்ரீகுமார், அவரது மனைவியும் திரைப்பட மற்றும் சீரியல் நடிகையுமான ஷமிதா ஸ்ரீகுமார் ஆகியோர் குடும்பத்துடன் சென்றதாக கூறப்படும் சென்னை வணிக வளாகத்தில் திடீரென ஏற்பட்டுள்ள தீவிபத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

serial actor shree visited mall there fire accident chennai

சீரியல் நடிகர் ஸ்ரீகுமார்

90களில் பிரபலமான ஆனந்தம், அகல்யா, பந்தம் உறவுகள், இதயம், பொம்மலாட்டம் என பல முன்னணி ஹிட் சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீகுமார். அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த, ‘யாரடி நீ மோகினி’ சீரியலின் நாயகனாக நடித்து வந்த இவர், தற்போது சன்.டி.வியின் ‘வானத்தைப் போல’ சிரீயலில் நாயகனாக நடித்துவருகிறார்.

serial actor shree visited mall there fire accident chennai

திரைப்பட, சீரியல் நடிகை ஷமிதா ஸ்ரீகுமார்

இவரது மனைவி ஷமிதா ஸ்ரீகுமார்,‘பாண்டவர் பூமி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகை. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் இவர்களை சின்னத்திரை உலகம் நன்கு அறியும்.

serial actor shree visited mall there fire accident chennai

வணிக வளாகத்தில் தீவிபத்து

இந்நிலையில்தான் நடிகர் ஸ்ரீகுமார், சென்னை தி.நகரில் உள்ள பாண்டி பாஜாரின் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்து சம்பவத்தில் காவல் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளதாக தெரிகிறது.

3வது ஃப்ளோரில்

serial actor shree visited mall there fire accident chennai

குறிப்பிட்ட அந்த வணிக வளாகத்தின் 2வது ஃப்ளோரில் இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படும் அதே சமயம், இந்த வணிக வளாகத்துக்கு நடிகர் ஸ்ரீகுமார் தனது குடும்பத்துடன் சென்றதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த பெரும் விபத்தில் யாருக்கும் சேதம் ஏதும் உண்டாகவில்லை என குறிப்பிடப்பட்டு வருகிறது. 

2வது வாழ்க்கை தான்..

இது பற்றி பேசிய நடிகர் ஸ்ரீகுமார், “இது எனக்கு 2வது வாழ்க்கை தான், இந்த மாதிரி அசம்பாவிதம் நடந்த பிறகுதான் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது. தீவிபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதமும் உண்டாகவில்லை. ஆனால் புகையால் கண் எரிச்சல் உண்டானது. நாங்கள் ஒரு 30 பேர் இருந்தோம், அனைவருமே மாடிக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார். 

வணிக வளாகத்தில் ஏற்பட்ட இந்த திடீர் தீவிபத்து சம்பவம் சென்னை நகர வாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "40 வயசு.. புருஷன் இல்ல.. 2 முறை Divorce ஆயிடுச்சு".. Bigg Boss வீட்டில் வனிதா உருக்கம்

"தப்பிச்சது 2வது வாழ்க்க தான்".. சென்னை தீவிபத்தில் சிக்கிய சீரியல் நடிகர் உட்பட 30 பேர். வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

serial actor shree visited mall there fire accident chennai

People looking for online information on Actor Shree fire accident, Shree, Shreekumar, TV serial actor, Vaanathai Pola, Yaaradi Nee Mohini will find this news story useful.