தொடரும் சோகம்! பிரபல டிவி சீரியல் நடிகரின் திடீர் மரணம்.. கலக்கத்தில் சின்னத்திரை உலகம்!
முகப்பு > சினிமா செய்திகள்திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கொரோனா சூழலில் மரணம் அடைந்தனர்.

இந்த சோக சம்பவங்கள் திரைத்துறையில் பெரும் அதிர்வலைகளை உண்டு பண்ணியுள்ள சூழலில், தொடர்ச்சியாக திரை இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதேபோல் நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு, நெல்லை சிவா உள்ளிட்டோரின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே சின்னத்திரை நடிகை சித்ரா தொடங்கி முக்கிய நகைச்சுவை கலைஞர் வடிவேல் பாலாஜி, பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகர் ஜோக்கர் துளசி, பாரதி கண்ணம்மா நடிகரான வெங்கட் உள்ளிட்ட பலரும் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகரான குட்டி ரமேஷ் தற்போது மரணம் அடைந்துள்ளார். சன்.டிவி, விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் வெகு காலமாக சீரியல்களில் நடித்து வந்த குட்டி ரமேஷ் மரணம் அடைந்துள்ள செய்தியை விஜய் டிவி தமது இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளது. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: சீமான் குடும்பத்தில் பெரும் சோகம்!.. "என் பிள்ளையை பெற்றெடுத்த"...பாரதிராஜா இரங்கல்!