www.garudabazaar.com

அச்சோ! ரசிகர்கள் ஷாக்.. "இந்த வருஷம்தான் கடைசி.. இனி நடிக்க மாட்டேன்" - பிரபல நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

06 பிப்ரவரி2022, இந்த வருடம் தான் எனக்கு கடைசி வருடம் என சினிமா துறைக்கு பாய் சொல்லியுள்ளார் தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா.

this is my last year i am not acting in future telugu actor

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றவர் தான் பிரபல தெலுங்கு நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா. இவர் 2015ஆம் ஆண்டு வெளியான  குறும்படத்தின் மூலம் திரையுலகிற்கு பிள்ளையார் சுழி போட்டவர். பின்னர் 2014ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானார்.

சினிமா துறைக்கு பாய்

இவரது கதாபாத்திரம் அப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'அல வைகுந்தபுரமுலா' மற்றும் 'ஜதிரத்னலு' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

this is my last year i am not acting in future telugu actor

மேலும், சமீபத்தில் வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்ற 'ஸ்கைலேப்' படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ஒடிடியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ராஜமவுலி இயக்கியுள்ள 'RRR' படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விலகுவதாக திடீர் அறிவிப்பு

இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ராகுல் ராமகிருஷ்ணா தற்போது திரைத்துறையிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

this is my last year i am not acting in future telugu actor

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த "2022ஆம் ஆண்டுதான் எனக்கு கடைசி" என்றும், "இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன்" என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், இது குறித்து "எனக்கு கவலை இல்லை, என்றும் யாரும் கவலைப்பட வேண்டாம்" என்றும் கூறியுள்ளார்.

இவரது இந்த அறிவிப்பால் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போடு வெடிய! அமிதாப் பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணையும் உயர்ந்த மனிதன்.. முடிவுக்கு வந்த பிரச்சனை.. வெளியான பரபரப்பு அறிக்கை.

this is my last year i am not acting in future telugu actor

People looking for online information on Rahul Ramakrishna will find this news story useful.