இதை விட ஒரு மனைவிக்கு வேற என்ன வேண்டும் - ஆல்யா மானஸாவுக்கு சஞ்சீவ் கிஃப்ட்.!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் சஞ்சீவ் அவரது மனைவி ஆல்யா மானஸாவுக்கு மிக விலையுயர்ந்த பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் குளிர் 100 டிகிரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ். இவர் விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்து தமிழகமெங்கும் பிரபலமானார். மேலும் அதே சீரியலில் நடித்த ஆல்யா மானஸாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து ஆல்யா மானஸா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்த நிலையில் சஞ்சீவ் அவருக்காக ஒரு பென்ஸ் காரை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்து ஆல்யா மானஸா பதிவிட்டுள்ளார். ''மிகவும் எக்சைட்டடாக இருக்கிறது. வாழ்க்கையில் அடித்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். உங்களது ஆசிர்வாதம் எப்போது இருக்க வேண்டும். லவ் யூ பப்புக்குட்டி சஞ்சீவ் கார்த்திக்'' என அவர் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Tags : Alya Manasa, Sanjeev, Raja Rani, Mercedes Benz