VIDEO :"ஒரு குழந்தைய எடுத்துட்டு, நூறு பசங்கள..." - பாடகி சித்ரா உருக்கம்... காரணம் இதுதான்..!
முகப்பு > சினிமா செய்திகள்பாடகி சித்ரா சினிமா துறைக்கு வந்து 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதுவரை 25,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 'சின்னக்குயில்' சித்ரா என்று தமிழ் சினிமாவில் பாசமுடன் அழைக்கப்படும் இவர் எண்ணற்ற மலையாள பாடல்களையும் பாடியுள்ளார்.

இவர் பிரபல தொலைக்காட்சி நடத்தும் பாடல் ரியாலிட்டி ஷோவில் நடுவராக தமிழ் மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். குழந்தைகளுடன் மழலையோடு மழலையாக அவர் செய்யும் குறும்புகள் ரசித்துக் கொண்டே இருக்கலாம். வாங்காத விருதுகள் இல்லை, பெறாத புகழ் இல்லை இருந்தும் துளி கூட செருக்கு இல்லாமல் இருப்பது, இவருக்கே உரிதான சிறப்பு.
சமீபத்தில் நமது Behindwoods சேனலுக்கு இவர் அளித்திருக்கும் பேட்டியில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் உடன் பணிபுரிந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மேலும் "சமூக வலைத்தளங்களால் தனக்கு பல குழந்தைகள் கிடைத்துள்ளனர், அவர்கள் எனக்காக வேண்டுதல் செய்கின்றனர். கடவுள் ஒரு குழ்நதையை எடுத்து 100 குழந்தைகளை கொடுத்துள்ளார்" என்றும் கூறியுள்ளார். இதோ அந்த நெகிழ்ச்சி ஊட்டும் வீடியோ உங்களுக்காக..!
VIDEO :"ஒரு குழந்தைய எடுத்துட்டு, நூறு பசங்கள..." - பாடகி சித்ரா உருக்கம்... காரணம் இதுதான்..! வீடியோ