"அம்மாவ பாக்கணும்!".. அடம் பிடித்த குழந்தைகள்!.. அம்மா இவங்களா?.. செந்தூரப் பூவே மாஸ் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் செந்தூரப்பூவே.

Senthoora Poove ranjith wife revealed priya raman viral promo

திரைப்பட நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடித்து வரும் இந்த சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நடிகர் ரஞ்சித் பல வருடம் முன்பு பிரபல திரைப்பட நடிகை பிரியா ராமனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பிரிந்து வாழ்ந்த இவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திரை வாழ்க்கையில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே வந்தனர்.

Senthoora Poove ranjith wife revealed priya raman viral promo

பிரியா ராமன், பிரபல சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'செம்பருத்தி' சீரியலில் மிக முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவருடைய, ‘அகிலாண்டேஸ்வரி’ என்கிற கதாபாத்திரம் மிகவும் வலுவானதாகவும், துணிச்சலானதாகவும், ஆளுமைமிக்க கதாபாத்திரமாகவும் இருக்கும்.

Senthoora Poove ranjith wife revealed priya raman viral promo

இப்படி இருவேறு ‘பூக்களின்’ பெயர்களை கொண்ட சீரியல்களில் ரஞ்சித்தும், பிரியா ராமனும் நடித்து வந்தாலும், இந்த ஜோடிகள் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்குமே என்று பல ரசிகர்கள் ஏக்கமுடன் இருந்ததுண்டு. ரசிகர்களின் இந்த தவிப்புக்கு பலனாக, தற்போது இந்த ஜோடி மீண்டும் இல்வாழ்க்கையில் இணைந்ததாக அறிவித்தனர். இதுபற்றி ரஞ்சித் மிகவும் மகிழ்ச்சியாக தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Senthoora Poove ranjith wife revealed priya raman viral promo

இந்த நிலையில்தான், ‘செந்தூரப்பூவே’ தொடரில், ரஞ்சித்தின் வீட்டில், ரஞ்சித் கதாபாத்திரத்தின் மறைந்த முதல் மனைவியின் குழந்தைகள் ‘எங்களது அம்மா எப்படி இருப்பாங்க?’ என்று கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருக்க, அப்போது ரஞ்சித்தின் மனைவியாக வரும் ரோஜா, குழந்தைகளிடம் அம்மாவை காண்பிப்பதாக கூறி ரஞ்சித், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்துச் சென்று ஒரு அறைக்குள் நிறுத்துகிறார்.

Senthoora Poove ranjith wife revealed priya raman viral promo

அந்த அறையில் குழந்தைகளின் அம்மா யார் என்கிற புகைப்படத்தை திறந்து காட்டுகின்றனர். அப்போது அந்த புகைப்படத்தில் நடிகர் ரஞ்சித்தின் நிஜ வாழ்க்கை மனைவியான பிரியா ராமனின் ஓவியம் வரையப் பட்டிருக்கிறது. இது சீரியல் ரசிகர்களுக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கும். குழந்தைகளோ, “இதுதான் எங்கள் அம்மாவா?” என்று அந்த ஓவியத்துக்கு முத்தம் கொடுக்கின்றனர். இந்த காட்சி சின்னத்திரை மற்றும் திரை உலகில் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

ALSO READ: "யோகி பாபு .. ராஜேந்திரனின் viral போஸ்!".. ஃபோட்டோ எடுப்பது நம்ம தல-யா?.. ட்விட்டரில் ரசிகர்கள்!

"அம்மாவ பாக்கணும்!".. அடம் பிடித்த குழந்தைகள்!.. அம்மா இவங்களா?.. செந்தூரப் பூவே மாஸ் ப்ரோமோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Senthoora Poove ranjith wife revealed priya raman viral promo

People looking for online information on PriyaRaman, Ranjith, Sembaruthi, SenthooraPoove, Tending, VijayTelevision will find this news story useful.