www.garudabazaar.com

தளபதி65: 'பீஸ்ட்' படத்தின் 'கொல மாஸ்' அப்டேட்!.. பூஜா ஹெக்டேவின் 'Viral' ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தளபதி65'.

Thalapathy65 Beast pooja Hegde chennai 2nd schedule photo

இந்த திரைப்படத்தின் தலைப்பு, மிக அண்மையில் தான், தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ரிவீல் செய்யப்பட்டது. அதன்படி இந்த படத்துக்கு பீஸ்ட் (Beast) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

முன்னதாக இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றிருந்தார். அங்கு நடந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகின. பின்னர் இந்த படத்துக்கான நடனப் பயிற்சியில் ஈடுபடத் தொடங்கியதாக பூஜா ஹெக்டே தெரிவித்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த படத்துக்கு புட்ட பொம்மா பாடல் புகழ், ‘ஜானி மாஸ்டர்’ நடன பயிற்சி கொடுக்கிறார். அத்துடன் சண்டைப் பயிற்சியினை ‘அன்பறிவ்’ கொடுக்கின்றனர்.

Thalapathy65 Beast pooja Hegde chennai 2nd schedule photo

இந்நிலையில், தளபதி65 - பீஸ்ட் (Beast) படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கி நடக்கவுள்ளது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, இப்படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே சென்னைக்கு வருகை தரும் புகைப்படம் இனையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ:'தளபதி' விஜயுடன் ராஷ்மிகா எப்போ படம் பண்ணுவாங்க?..  fans-க்கு அவரே சொன்ன Viral பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy65 Beast pooja Hegde chennai 2nd schedule photo

People looking for online information on Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, ThalapathyVijay, Vijay will find this news story useful.