"யோகி பாபு .. ராஜேந்திரனின் viral போஸ்!".. ஃபோட்டோ எடுப்பது நம்ம தல-யா?.. ட்விட்டரில் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகி பாபு தமிழ்த் திரைச் சூழலில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர். 

yogi babu and motta rajendran pic is that thala ajith

முன்னதாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த யோகி பாபு, பின்னர் 'கோமாளி' உள்ளிட்ட திரைப்படங்கள் வரை குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார். இதனைத் தொடர்ந்து தல அஜித்தின் 'விஸ்வாசம்', விஜய் நடித்த 'சர்க்கார்' உள்ளிட்ட திரைப்படங்களிலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

ஹீரோவாக 'கூர்கா', 'தர்மபிரபு', 'மண்டேலா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இதில் 'மண்டேலா' திரைப்படம் யோகி பாபு நடிப்பில் கடைசியாக வெளியானதுடன், நல்ல மதிப்பீடுகளை பெற்ற முக்கிய படமாகவும் அவருக்கு அமைந்தது. 

இதனிடையே நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துவரும் தளபதி65 படமான 'பீஸ்ட்' திரைப்படத்திலும், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகும் 'வலிமை' திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தான் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் இணைந்து படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை யோகிபாபு தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த பலரும் புகைப்படம் எடுப்பது தல அஜித்தா? என கேட்கத் தொடங்கியுள்ளனர். தல அஜித் அவ்வப்போது சக நடிகர்களை புகைப்படம் எடுக்கும் பழக்கம் உடையவர் என்பது குறிப்பிடத் தக்கது. 

ALSO READ: 'தல' படத்தில் 'மெட்டி ஒலி', 'ரோஜா' சீரியல் நடிகையா?.. Trending-ல் வைரல் Throwback ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

yogi babu and motta rajendran pic is that thala ajith

People looking for online information on Motta Rajendran, ThalaAjith, Trending, Yogi Babu will find this news story useful.