www.garudabazaar.com

இந்த ஜோடி சேராதானு எத்தன பேர் நெனைச்சிருப்போம்! அது நடந்தாச்சு! நடிகரின் உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

1999 ஆம் ஆண்டு நேசம் புதுசு என்கிற திரைப்படத்தில் நடிகை ப்ரியா ராமன் மற்றும் நடிகர் ரஞ்சித் ஜோடியாக இணைந்து நடித்தார்கள். 

priya raman ranjith reconcile on 22nd wedding anniversary

அதன்பின் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  இந்த தம்பதியருக்கு  2 மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.  இதனையடுத்து நடிகர் ரஞ்சித் நடிகை ராக சுதாவை அடுத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.

தற்போது ரஞ்சித் மற்றும் ப்ரியா ராமனின் 22-வது ஆண்டு திருமண நாளன்று இவர்கள் ரஞ்சித் மற்றும் ப்ர்யா ராமன் மீண்டும் இணைந்து ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் செம வைரலாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த பதிவில் ரஞ்சித், “என் அன்பு தங்கங்களின் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளால் எங்கள் வாழ்க்கை பயணம் மிகவும் அழகாகிறது. நன்றியும், மகிழ்ச்சியும் தங்கங்களே உங்கள் அன்பு வாழ்த்தினில் அகம் மகிழ்கிறேன். நன்றிகள் கோடி தங்கங்களே!!” என்று தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகை ப்ரியா ராமன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கும் செம்பருத்தில் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில்  மாஸ் கேரக்டரில் நடிக்கிறார். இதே போல் நடிகர் ரஞ்சித்தும் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்கும் செந்தூர பூவே சீரியலில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் நடிக்கும் சீரியல்கள் இரண்டும் மலர்களின் பெயரிலேயே இருப்பது கூட சுவாரஸ்யமான ஒன்று தான்!

ALSO READ: "காதுல கேக்க முடியல.. மோசம்!".. மதனின் வக்கீலிடம் அந்த யூடியூபை முழுதாய் பார்க்க சொன்ன நீதிபதி!

தொடர்புடைய இணைப்புகள்

priya raman ranjith reconcile on 22nd wedding anniversary

People looking for online information on Actor Ranjith, PriyaRaman, Ranjith, Sembaruthi, Senthoora Poove, Vijay tv, ZeeTamil will find this news story useful.