www.garudabazaar.com

செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் திடீர் நீக்கம்... ஜீ தமிழ் அறிவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் தான் செம்பருத்தி. ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானாவும் ஜோடியாக நடித்தனர். இந்த ஜோடி ரசிகர் மனதில் மிகவும் வைரலானது. இவர்களுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் சீரியல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார்த்திக் இந்த தொடரில் இருந்து மாற்றப்பட்டுள்ளார் என்று தகவலை ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

semabaruthi serial actor karthik is repalced நடிகர் கார்த்திக் திடீர் நீக்கம்

2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் "இந்த தொடரை ஒரு மாபெரும் வெற்றி தொடராக மாற்றிய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. இந்த தொடரில் கார்த்திக்ராஜின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை நாங்கள் பாராட்டாமல் இருக்க முடியாது. அதுவே செம்பருத்தி சீரியலின்  மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் கார்த்திக்ராஜ் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தொடரிலிருந்து மாற்றப்பட்டு உள்ளார். ஆனால் எங்கள் சேனலுடன் அவரது தொடர்பு தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

செம்பருத்தி சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் திடீர் நீக்கம்... ஜீ தமிழ் அறிவிப்பு..! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

semabaruthi serial actor karthik is repalced நடிகர் கார்த்திக் திடீர் நீக்கம்

People looking for online information on Sembaruthi, Zee Tamil will find this news story useful.