www.garudabazaar.com

Video: எல்லாரும் 'அவங்களுக்காக' வருத்தப்பட்டுட்டு இருந்தாங்க... அந்த 'ரெண்டு' பேரு மட்டும்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் முதல்முறையாக இரண்டு போட்டியாளர்கள் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். முதலில் ஜித்தன் ரமேஷ் வெளியேற, நேற்று நிஷா வெளியேறி இருக்கிறார். இதனால் போட்டியாளர்களின் எண்ணிக்கை தற்போது 10 ஆக குறைந்துள்ளது. இரண்டு வாரம் எவிஷன் நடைபெறவில்லை என்பதால் பிக்பாஸ் இப்படி செய்து விட்டார் போல.

Ramya Pandian and Balaji's smiling video goes viral

நேற்று ஷிவானி, ரம்யா, சோம், நிஷா ஆகியோரை அருகருகே அமரவைத்த கமல் ரம்யா காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். தொடர்ந்து சோமையும் காப்பாற்றினார். இதையடுத்து ஷிவானி, நிஷா இருவரும் இருந்த நிலையில் நிஷா வெளியேறியதாக அறிவித்தார். அவரது வெளியேற்றம் அர்ச்சனா, ரியோ ஆகியோருக்கு ஷாக்கிங்காக இருந்தது. எனினும் நிஷா பெரிதாக கவலை காட்டாமல் சிரித்த முகத்துடன் வெளியேறி விட்டார்.

நிஷா கேட்டது போல ஐ லவ் யூ சொல்லவில்லை என்றாலும் அவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி பிக்பாஸ் வழியனுப்பி வைத்தார். இதற்கிடையில் அனைவரும் சோக முகத்துடன் நின்று கொண்டிருக்க ரம்யாவுக்கு சிரிப்பு வந்து விட்டது போல. அவர் பாலாஜியை பார்த்து சிரிக்க பதிலுக்கு பாலாஜி அவரைப்பார்த்து சிரித்து வைத்தார். இந்த வீடியோ அந்த எடத்துல போய் சிரிக்கணுமா? என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian and Balaji's smiling video goes viral

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.