பிரபல நடிகை மரணம் அடைந்தார்.. மாரடைப்பால் நடந்த சோகம்... இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்2020-ஆம் வருடம் மிகவும் கடினமான வருடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கலைஞர்கள் பலரும் அடுத்தடுத்த மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பல கலைஞர்கள் கொரோனா மற்றும் உடல் உபாதைகள் அல்லது விபத்து காரணமாக அதிகமாக மரணித்து வருகின்றனர்.
இந்நிலையில் புகழ்பெற்ற பாலிமர், ஜீ தமிழில் ஒளிபரப்பான இரு மலர்கள் மற்றும் இனிய இரு மலர்கள் ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஜரினா ரோஷன் கான் தற்போது மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். 54 வயதாகும் இவர் தொலைக்காட்சியில் நடிக்க வருவதற்கு முன்பு ஸ்டண்ட் வுமனாக பல படங்களில் பணியாற்றியுள்ளார். இந்த சீரியலின் கதாநாயகன் ஷபீர் அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.