LIGER D Logo Top
www.garudabazaar.com

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. இர்ஃபான் பதான் பகிர்ந்த வைரல் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் BTS போட்டோவை இர்ஃபான் பதான் வெளியிட்டுள்ளார்.

Irfan Pathan shared Vikram Cobra Movie BTS Image

Also Read | Breaking: "டைட்டிலே செமயா இருக்கே?".. சந்தானத்தின் அடுத்த படம் இதுவா? யாரு டைரக்டர்?

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

Irfan Pathan shared Vikram Cobra Movie BTS Image

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் நேற்று ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகி உள்ளது.

Irfan Pathan shared Vikram Cobra Movie BTS Image

டிரெய்லரில் இர்ஃபான் பதான், மிருணாளினி ரவி, ஶ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் தோன்றிய காட்சிகள் இடம்பெற்றன. இந்நிலையில் கோப்ரா படத்தின் டிரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் இர்பான் பதான் பகிர்ந்து படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Irfan Pathan shared Vikram Cobra Movie BTS Image

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது.

Irfan Pathan shared Vikram Cobra Movie BTS Image

கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | Cobra Trailer: விக்ரம் செய்த செயல்.. விழா மேடையிலே நெகிழ்ந்து போன தொகுப்பாளினி.!

தொடர்புடைய இணைப்புகள்

Irfan Pathan shared Vikram Cobra Movie BTS Image

People looking for online information on Cobra, Irfan Pathan, Vikram, Vikram cobra movie will find this news story useful.