"காதலை சொன்னால் பரிசு உண்டு!" - Love குறித்த செல்வராகவன் ட்வீட்டுக்கு பிரபல இயக்குநர் Viral Reply
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.
அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.
இதனிடையே சமீப காலமாக இயக்குநர் செல்வராகவன் சில வாழ்வியல் அனுபவங்களை பதிவுகளாக சோசியல் மீடியா பக்கங்களில் எழுதி வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது வைரலாகவும் செய்யும். அந்த வகையில் முன்னதாக செல்வராகவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை எழுதியிருந்தார்.
அவற்றுள், "வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு ! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்", "பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல", “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” ஆகிய பதிவுகள் வைரலாகின.
இந்நிலையில், “அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது ! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ❤️” என்று இயக்குநர், நடிகர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்திருந்த இயக்குநர் சீனு ராமசாமி, “காதலை மனம் திறந்து சொன்னால் ஒரு காதல் பரிசாக உண்டு அதற்கு வாழ்த்துகிறேன். இக்கருத்தை சிலாகித்தேன் செல்வா சார்.” என ட்வீட்டில் பதில் அளித்துள்ளார்.
இயக்குநர் சீனு ராமசாமி, கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் மாமனிதன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, தற்போது ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி வருகிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Selvaraghavan Tweet About First Love செல்வராகவன் ட்வீட்
- Napoleon Seenu Ramasamy New Movie Update
- Director Selvaraghavan Latest Tweet Goes Viral Among Fans
- Director Selvaraghavan Post About Money Goes Viral
- How Can I Find Friends Selvaraghavan Emotional Tweet
- Selvaraghavan About Part 2 And His Cinema Universe Exclusive
- Actress Laya About Bakasuran Movie Mohan G Selvaraghavan
- Actress Laya About Bakasuran Movie And Selvaraghavan Exclusive
- Selvaraghavan Bakasuran Director Mohan G Sticks Poster
- SJ Suryah GV Prakash Selvaraghavan Praises Bakasuran
- Mohan G Daughter Question To Director Selvaraghavan About Movies
- Bakasuran Selvaraghavan On Mohan G And Pa Ranjith Films
தொடர்புடைய இணைப்புகள்
- "ROLLING TITLE -க்கு நம்ம SONG வைக்கறோம் 🤣💥"-செல்வராகவன் #shorts #shortsvideos
- "எல்லாம் யுவன் பத்துப்பாரு 😂"-SELVARAGAVAN #shorts #shortsvideos
- "பையா MOVIE AUDIO கேட்டுட்டு செல்வராகவன் சண்டை போட்டாரு 🤣" #shorts #shortsvideos
- SELVARAGAVAN-"யுவன் OSCAR AWARD கூடிய சீக்ரம் வாங்குவாரு "🔥 #shorts #shortsvideos
- யுவன் முன்னாடி பாடி அசத்திய FAN BOY🔥 #shorts #shortsvideos
- "Bakasuran படத்த நாம எல்லாரும் கொண்டாடித் தான் ஆகணும்"... Malaysia-விலிருந்து வந்த ஆதரவு
- அப்படியெல்லாம் சொல்லணும்னு ஆசைதான் .. Selvaraghavan Replay For Clashing With Vaathi
- "நா யாரையும் எதிரியா பாக்கல" இயக்குனர்களுக்கு பொறுப்பு இருக்கு.. Bagasuran Mohan G Bold Speech
- "நாளைக்கே நான் செத்து போனா கூட, இவனுங்க..!" - Selvaraghavan Red Hot Interview | Bakasuran
- "துணை என்பது கானல் நீர்.. தனியாகத்தான் வந்தோம்" செல்வராகவன் போட்ட திடீர் Tweet! காரணம் என்ன?
- “12 வருஷமா சொல்லல, இப்போ சொல்றேன் I Love You”❤️ Selvaraghavan Proposes Gitanjali On Stage😍
- "Mic Mohan தான் ஒரு பொண்ண எப்படி கட்டிப்புடிக்கணும்னு கத்து கொடுத்தாரு"... Seenu Ramasamy Speech