www.garudabazaar.com

‘நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது!’ - முதல் காதல் குறித்து வைரலாகும் செல்வராகவன் ட்வீட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Selvaraghavan Tweet about first love செல்வராகவன் ட்வீட்

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களை இயக்கி ஹிட் இயக்குநராக வலம் வருபவர் செல்வராகவன். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவன், கடைசியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படத்தை இயக்கிய செல்வராகவன், தற்போது மோகன்.ஜி இயக்கத்திலான பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். முன்னதாக பீஸ்ட், சாணி காயிதம் ஆகிய திரைப்படங்களிலும் செல்வராகவன் நடித்திருந்தார். இதில் சாணி காயிதம் படத்தில் செல்வராகவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அண்மையில் வெளியான பகாசுரன் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குனர் மோகன் ஜி, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கி இருந்தார்.

இந்தப் படம் கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நட்டி, ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசிலையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்திருந்தார். இதில், இயக்குநர் செல்வராகவன் முதன்மைக் கதாபாத்திரத்தில் கட்டைக்கூத்து கலைஞனாக நடித்திருந்தார்.

இதனிடையே சமீப காலமாக இயக்குநர் செல்வராகவன் சில வாழ்வியல் அனுபவங்களை பதிவுகளாக சோசியல் மீடியா பக்கங்களில் எழுதி வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்களுக்கு மத்தியில் அவ்வப்போது வைரலாகவும் செய்யும். அந்த வகையில் முன்னதாக செல்வராகவன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை எழுதியிருந்தார்.

அவற்றுள், "வெறுப்பு என்பது மிக மோசமான உணர்வு ! அது உங்களைத்தான் அதிகம் காயப்படுத்தும். மனதிற்கும் சேதம் விளைவிக்கும். வாழ்க்கையில் பார்க்க எவ்வளவோ இருக்கின்றது. வெறுப்பை தூக்கி கடாசிவிட்டு முன்னோக்கி போய் விடுங்கள்", "பணம் கையில் வந்தால்தான் நிஜம். அதற்கு முன் கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம்!! அனுபவம். தத்துவம் அல்ல",  “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்.” ஆகிய பதிவுகள் வைரலாகின.

இந்நிலையில், “அந்த முதல் காதலில் அப்படி என்னதான் இருந்ததோ ! நினைத்து நினைத்து ஆயுள் முடிந்தது ! அது வாழ்க்கையில் ஒரு முறைதான் என்பதை கடவுளும் நம்மிடம் கூறவில்லை ❤️” என்று இயக்குநர், நடிகர் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார். 

Selvaraghavan Tweet about first love செல்வராகவன் ட்வீட்

நான்கு நாட்களுக்கு மூன், “உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதே இல்லை. எல்லாம் உங்களின் நம்பிக்கையை பொறுத்தது. எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம். அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்?” என்றும் இயக்குநர் செல்வராகவன் ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Selvaraghavan Tweet about first love செல்வராகவன் ட்வீட்

People looking for online information on Selvaraghavan, Selvaraghavan Viral Tweet, Selvaraghavan Tweet will find this news story useful.