''இந்த ஹாலிவுட் படத்துக்கு பாலா படமும் இன்ஸ்பிரேஷனாக இருக்கலாம்'' - பிரபல இயக்குநர் கருத்து
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 30, 2019 05:35 PM
தொடர்ச்சியாக கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட யதார்த்த படங்களின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் சீனு ராமசாமி. இவர் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினை ஹீரோவாக வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் தமன்னா, வடிவுக்கரசி, பூ ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இவர் தற்போது விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் காயத்ரி, அனிகா, காளிவெங்கட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தி ஃபெனடிக் என்ற படத்தின் டிரெய்லரை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆகஸ்ட் மாதம் வெளியாகப்போகும் இப்படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக குசேலன்,மாயாவி,பிதாமகன்,ஜீலி கணபதி ஆகிய படங்கள் இருக்கலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்சொன்ன படங்களில் மாயாவி படத்தை தயாரித்த பாலா, பிதமாகன் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.