"இப்பவே K Tv பாருங்க"...பிரபல இயக்குனர் திடீர் பதிவு...ஏன் இப்படி சொல்றாரு தெரியுமா..??
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா அச்சறுத்தலில் இருக்கிறது. மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி பட்ட சூழ்நிலையை இந்திய மக்கள் இதுவரை சந்தித்ததில்லை. எதிர்பார்க்கவும் இல்லை. வேலை செய்பவர்களும் கூட வீட்டில் இருந்து தான் வேலை செய்து வருகின்றனர். பலரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்கின்றனர்.

இந்நிலையில் மக்களுக்கு பெரிய ஆறுதலாக இருப்பது தொலைக்காட்சியும், மொபைலும் தான். அதிலும் பல சேனல்கள் மக்களை மனரீதியாக உற்சாகமாக வைத்திருக்க சில வித்தியாசமான யோசனைகளை செய்து வருகின்றனர். படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பல சூப்பர்ஹிட் படங்களை சீரியல்களுக்கு பதிலாக ஒளிபரப்புகின்றனர்.
இந்நிலையில் இன்று (30.03.2020) மதியம் 1 மணிக்கு கே. டி.வி-யில் 'தல' அஜித் நடித்த 'மங்காத்தா' படம் போடுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் "இது மங்காத்தா நேரம். கே டிவி" என்று கூறியுள்ளார்.
#Mankatha time!! @KTVTAMIL #StayHomeStaySafe
— venkat prabhu (@vp_offl) March 30, 2020