www.garudabazaar.com

Raawadi : அப்போ சமந்தாவின் `ஓ சொல்றியா மாமா`.. இப்போ சயீஷாவின் `ராவடி`.. ட்ரெண்ட் ஆகும் பத்து தல Song

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

sayeesha Raawadi song response after samantha Oh solreya mama

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 70 வயதில் பீமரதசாந்தி திருமண பூஜையில் குடும்பத்துடன் நடிகர் செந்தில்..! வைரல் புகைப்படங்கள்..

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் K L பணிபுரிகிறார். இப்படம் மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

sayeesha Raawadi song response after samantha Oh solreya mama

Images are subject to © copyright to their respective owners.

இப்படத்தில் சமீபத்தில் இராவடி எனும் பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பிரபல நடிகையும் நடிகர் ஆர்யாவின் மனைவியுமான சயீஷா இந்த பாடலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேளிக்கை கொண்டாட்ட பாடலான இந்த பாடல் முன்னதாக சமந்தா நடிப்பில் புஷ்பா திரைப்படத்தில் வெளியான ஓ சொல்றியா மாமா பாடல் வரிசையில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

sayeesha Raawadi song response after samantha Oh solreya mama

Images are subject to © copyright to their respective owners.

நடிகை சயீஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் மற்றும் டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். அண்மையில் இவருக்கும் ஆர்யாவுக்கும் திருமணமாகி குழந்தை பிறந்த நிலையில், திரும்பவும் சயீஷா திரைத்துறையில் முழு கவனம் செலுத்துகிறார்.

sayeesha Raawadi song response after samantha Oh solreya mama

Images are subject to © copyright to their respective owners.

அதன் முதல் அங்கமாக வெளியாகியுள்ள ராவடி பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | ‘நான் போறேன்’.. ஜீவா & கண்ணனை அடுத்து மூர்த்தியா..?.. உடையும் Pandian Strore குடும்பம்..!

தொடர்புடைய இணைப்புகள்

sayeesha Raawadi song response after samantha Oh solreya mama

People looking for online information on Oh solreya mama Song, Pathu Thala, Raawadi, Samantha, Sayeesha, Silambarasan TR will find this news story useful.