www.garudabazaar.com

'பத்து தல' படத்தின் இராவடி பாடல்.. சாயிஷா பகிர்ந்த வேற லெவல் மேக்கிங் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்து தல படத்தின் இராவடி பாடல் மேக்கிங் BTS வீடியோவை சாயிஷா பகிர்ந்துள்ளார்.

Silambarasan TR Pathu Thala Raawadi Song making video

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல' படம் பார்த்த சிம்பு.. கூட யாரெல்லாம் இருக்காங்கனு பாருங்க!  

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Silambarasan TR Pathu Thala Raawadi Song making video

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

Silambarasan TR Pathu Thala Raawadi Song making video

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  சமீபத்தில் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Silambarasan TR Pathu Thala Raawadi Song making video

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகை சாயிஷா பத்து தல படத்தின் இராவடி பாடல் மேக்கிங் போட்டோ & வீடியோவை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் இராவடி பாடல் வீடியோ வடிவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் சில மேக்கிங் வீடியோவை வெளியிட திட்டமிட்டு வருவதாக சாயிஷா ட்வீட் செய்துள்ளார்.

Also Read | சிவகார்த்திகேயன் & சாய் பல்லவி நடிக்கும் புதிய படம்.. என்ன மாதிரியான கதைக்களம்? SK சொன்ன பதில்!

தொடர்புடைய இணைப்புகள்

Silambarasan TR Pathu Thala Raawadi Song making video

People looking for online information on Pathu Thala, Pathu Thala Raawadi Song, Silambarasan TR will find this news story useful.