www.garudabazaar.com

சிம்பு நடிக்கும் பத்து தல.. TV ஒளிபரப்பு உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! செம்ம மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பத்து தல படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Pathu Thala satellite rights Bagged by Zee Tamil tv deets

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல' படம் பார்த்த டி. ராஜேந்தர்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 Pathu Thala satellite rights Bagged by Zee Tamil tv deets

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

 Pathu Thala satellite rights Bagged by Zee Tamil tv deets

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 Pathu Thala satellite rights Bagged by Zee Tamil tv deets

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  சமீபத்தில் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 Pathu Thala satellite rights Bagged by Zee Tamil tv deets

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இன்று ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பத்து தல படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஜி தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிரத்யேக வடிவமைப்பு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

Also Read | பெரிய சம்பவம்.. "ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு".. கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த GVP!

தொடர்புடைய இணைப்புகள்

Pathu Thala satellite rights Bagged by Zee Tamil tv deets

People looking for online information on Pathu Thala, Pathu Thala satellite rights, Silambarasan TR, Zee Tamil will find this news story useful.