www.garudabazaar.com

ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல' படம் பார்த்த டி. ராஜேந்தர்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

T Rajendar Watched Silambarasan TR Pathu Thala

Images are subject to © copyright to their respective owners.

Also Read | எருமை முதல் சேவல் வரை.. "இதுக எல்லாம் என் ப்ரண்ட்ஸ்" 🤩.. கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த வீடியோஸ்!

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

T Rajendar Watched Silambarasan TR Pathu Thala

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

T Rajendar Watched Silambarasan TR Pathu Thala

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நாளை மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

T Rajendar Watched Silambarasan TR Pathu Thala

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  சமீபத்தில் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

T Rajendar Watched Silambarasan TR Pathu Thala

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் டி. ராஜேந்தர், ரிலீஸ்க்கு முன்பே 'பத்து தல'படத்தினை சிறப்பு காட்சியில்  கண்டு களித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி உள்ளது. சிம்பு, இயக்குனர் கிருஷ்ணா ஆகியோர் டி. ராஜேந்தர் உடன் இருந்தனர். படம் பார்த்த பிறகு படம் பிடித்து இருந்ததாக கூறி, சிலம்பரசன், ஸ்டூடியோ க்ரீன் & இயக்குனர் கிருஷ்ணா ஆகியோரை வாழ்த்தியுள்ளார்.

Also Read | பெரிய சம்பவம்.. "ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு பிறகு".. கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த GVP!

தொடர்புடைய இணைப்புகள்

T Rajendar Watched Silambarasan TR Pathu Thala

People looking for online information on Pathu Thala, Silambarasan TR, T rajender will find this news story useful.