“ஒன்பது ரூபாய் நோட்டு படம் பார்த்து அமைதியான கலைஞர்.. அழுதுட்டார்”.. சத்யராஜ்!
முகப்பு > சினிமா செய்திகள்கடந்த 2007-ம் ஆண்டு இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியான படம் "ஒன்பது ரூபாய் நோட்டு". இத்திரைப்படம் உருவாகி 15வது ஆண்டை கொண்டாடும் வகையில் இயக்குநர் தங்கர் பச்சான் ஒரு நெகிழ்ச்சி பதிவை பதிவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து இப்படம் குறித்து பேசி வீடியோ பதிவிட்ட நடிகர் சத்யராஜ், “‘ஒன்பது ரூபாய் நோட்டு’ எனும் காவியம் வெளியாகி 15 வருடங்கள் ஆகுது. அந்தப் படத்துல நான் மாதவ படையாட்சிங்குற கதாபாத்திரத்தில் நான் நடிக்கல.. வாழ்ந்ததாக எல்லாரும் சொல்லுவாங்க.. ஆனால் அதை வாழவைத்து தங்கர் பச்சானின் கதை திரைக்கதை வசனம் ஒளிப்பதிவு தான். இது அவர் எழுதிய கதையல்ல. அவருக்குள் ஊறுன கதை. மண் சார்ந்த கதை. அவர் கண்முன்னாடி நடந்த ஒரு கதையை அவர் சொன்னா எப்படியிருக்குமோ, அப்படித்தான் படம். படம் பார்த்த உணர்வே இருக்காது.. இந்த நிகழ்ச்சிகள் நடக்கையில் ஓரமாக நின்று வேடிக்கைப்பார்த்த மாதிரி இருக்கும்.
பரத்வாஜ் சாரின் அற்புதமான இசை. வைரமுத்துவின் வைர வரிகள். கூட நடிச்ச அர்ச்சனா, நாசர், ரோகினி எல்லாருமே மிக பிரமாதமா பண்ணிருப்பாங்க. இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைச்சது மிகப்பெரிய பாக்கியம். பொதுவா நான் நடிச்ச நிரைய படங்களை கலைஞர் கருணாநிதி பார்த்து நிறையா இருந்தாலும், குறையா இருந்தாலும் சுட்டிக்காட்டுவார். இந்தப் படத்தை பார்த்துட்டு, படம் முடிஞ்சும் கலைஞர் எழுந்திருக்கவே இல்லை.. அப்படி உட்கார்ந்து இருந்தார்.
எனக்கு என்னடானு இருந்தது, அவர் பக்கத்துல போய் நின்னேன். அப்படியே அமைதியாக இருந்தார். கையை புடிச்சிட்டாரு.. பாத்தா அவர் கண்களில் கண்ணீர். நானும் கண் கலங்கிவிட்டேன். அவர் எதுவும் பேசாம அமைதியாக இருந்தார். ரொம்ப நேரம் எனக்கு என்ன செய்றதுனே தெரில. ‘என்னை இப்படி அழ வைச்சுட்டியே’ னு சொல்லி கட்டியணைச்சாரு... தங்கர் பச்சானை கட்டியணைச்சு பாராட்டுனாரு.. இப்படியான கலைஞரை நான் பார்த்ததே இல்லை. அவரின் சொல் வளம் எல்லோருக்குமே தெரியும். அது பாராட்டா இருந்தாலும் சரி, குறைகளா இருந்தாலும் சரி அதுல ஒரு அழகான நகைச்சுவை இருக்கும். அப்படிப்பட்ட கலைஞரை கலங்க வைத்த படம் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’. 15 வருடம் கழித்து மறுபடியும் என் அன்புத்தம்பி தங்கருக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 15 Years Of Onbadhu Roobai Nottu Thangar Bachan Post
- Nayanthara SathyaRaj Connect Movie Teaser Released
- Nayanthara Vinay SathyaRaj Connect Movie Poster
- Thangar Bachchan Directs Bharathiraja, GVM, Yougibabu In Next Film
- Bharathiraja Healthily Discharged Joins Next Thangar Bachchan Film
- Vignesh Shivan Post About Nayanthara Sathyaraj Connect Movie
- Maari2 Power Pandi Sathyaraj Veetla Visesham
- Sivakumar Family Helped For Cinema Entry Says Sathyaraj
- Veetla Vishesham Sathyaraj Shares 90s Film Actress Memories Exclusive
- Vijay Antony, Sathyaraj, Bharathiraja New Movie Valli Mayil Shooting Started At Dindigul
- 'VALLI MAYIL' Is An Upcoming Film Directed By Suseenthiran, Starring Vijay Antony, Sathyaraj, Bharathi Raja
- Sathyaraj Speech At Radhe Shyam Tamil Nadu Press Meet
தொடர்புடைய இணைப்புகள்
- என் அப்பா கட்டப்பாவே கூட இருக்காரு, இனி எந்த Super Hero வேணும்😍?Sathyaraj Daughter Divya's Cute Post
- நண்பன் சத்யராஜ் - டான் எஸ்.ஜே.சூர்யா | Teachers Day: மறக்க முடியுமா..? திரையில் நாம் பார்த்த இந்த ஐகானிக் ஆசிரியர்களை.. - Slideshow
- Beef Biriyani, முட்ட குழம்பு வேணுமா 😋 Sathyaraj Sir இருந்தாலே Fun தான் போல 🤣
- மாமனாரா நடிச்சுட்டு மறுநாள் Swim Suit போட்டு ஓடுவோம் 😂 இருந்தாலும் ரொம்ப லொல்லு மா 🤣
- Siva Karthikeyan-க்கு இவ்ளோ கோவம் வருமா? 😱😂 செம்ம Dose வாங்கிய Prince Director Anudeep 🤣
- யாருக்கு தம்பி பாப்பா வேணும்? 🥳🤣 Theatre-ல RJ Balaji செம்ம கலாய் 🤩 Veetla Visesham
- "படத்துல மட்டும் MASS காட்டுற HERO இல்ல SURIYA தம்பி🔥 ரசிகர்கள் எல்லாம் வெறித்தனமா இருக்காங்க😯❤️"
- "ரூ.9700 சம்பளம்.. 3 லோன்" மிடில் கிளாஸ் வலிகள்..! ஆனா இதை பண்ணேன்? கலங்க வைத்த RJ பாலாஜி
- "PG Fees கட்டுனதே Friends தான்" சல்லி சல்லியா நொறுக்கிய RJ Balaji
- 60 வயசு, ஆனா உள்ளுகுள்ள 40 🤣 கிண்டல், கேலி, நக்கள், நய்யாண்டி 100% Fun Sathyaraj & Urvashi Interview
- நடிக்க வந்து 19 வருசம் ஆச்சா 😳 19 வயசுல நடிக்க வந்தேன் - Sibi Sathyaraj
- விஜய் சேதுபதி Sir..வேற லெவல் நீங்க😍🔥 1,00,000 பேருக்கு வேலை.. சத்தமில்லாமல் உதவிய மக்கள் செல்வன்