www.garudabazaar.com

BREAKING: புதிய படத்தில் 8 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் - சத்யராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன். வளர்ந்து வரும் ஹீரோக்களில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சிவகார்த்திக்கேயனுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

Sathyaraj has been roped for Sivakarthikeyan- Anudeep Movie

டாக்டர் வெற்றி

தமிழ் சினிமாவில் இவர் படங்கெளுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் (Doctor) திரைப்படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த டாக்டர் திரைப்படம். டாக்டர் (Doctor) திரைப்படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. 

Sathyaraj has been roped for Sivakarthikeyan- Anudeep Movie

டான்

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.  இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பிரியங்கா மோகன் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

Sathyaraj has been roped for Sivakarthikeyan- Anudeep Movie

தெலுங்கில் சிவகார்த்திகேயன்

இதனை அடுத்து சிவகார்த்திகேயன், நவீன் பாலிஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நகைச்சுவை திரைப்படமான ஜதி ரத்னலு பட இயக்குனர் அனுதீப் கே.வி.யுடன் தெலுங்கு-தமிழ் என இருமொழிகளில்  உருவாக இருக்கும் அடுத்த படத்தில் இணைகிறார் . இந்த படத்தினை தயாரிப்பு நிறுவனமான அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கிஸ் நிறுவனமே இந்த சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Sathyaraj has been roped for Sivakarthikeyan- Anudeep Movie

சிவகார்த்திகேயன் - சத்யராஜ்

இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2022 ஜனவரி மாதத்தில் 23 ஆம் தேதியில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் இசை இயக்குனர் தமன் டிவிட்டரில் டிவீட் செய்து ''உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21'' என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் 8 வருடங்களுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சத்யராஜ், கனா படத்தில் நடித்திருந்தாலும் இருவர்க்கும் சேர்ந்த காட்சிகள் இல்லை. சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில், டி. இமான் இசையில் 2013-ம் ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தான் கடைசியாக சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் தோன்றினார்.

தொடர்புடைய இணைப்புகள்

Sathyaraj has been roped for Sivakarthikeyan- Anudeep Movie

People looking for online information on Anudeep, Sathyaraj, Sivakarthikeyan, SK 21, Tamil Telugu Bilingual will find this news story useful.