www.garudabazaar.com

Making Glimpse வீடியோவுக்கு பிறகு.. ஜெயிலர் படம் பத்தி வெளியான அதிரடி அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகி இருந்தது.

Rajinikanth jailer movie shooting update deets

Also Read | குழந்தையுடன் ‘தமிழன்’ பட நடிகை பிரியங்கா சோப்ரா.. 😍 வைரலாகும் புதிய ஃபோட்டோஸ்

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதிஷ், சூரி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ள நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்திலும் தற்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் சென்னையில் துவங்கியது. சென்னை ஆதித்ய ராம் ஸ்டூடியோ, மகாபலிபுரத்தில் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து. இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய நத்தம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் நடைபெற்றிருந்தது.

Rajinikanth jailer movie shooting update deets

ஜெயிலர் திரைப்படத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது.

அதே போல, சமீபத்தில் படத்தின் உருவாக்க கிளிம்ப்ஸ் வீடியோவை படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தது. 13 வினாடி நீளம் உடைய இந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் தோன்றி இருந்தனர். இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

Rajinikanth jailer movie shooting update deets

அதன்படி, ஜெயிலர் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் வைத்து ஆரம்பமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

ஜெயிலர் படத்திற்கு பிறகு, மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜையும் சமீபத்தில் நடந்தது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Also Read | அட்ராசக்க..! பிரேமம் இயக்குநரின் அடுத்த படம் 'GOLD'.. Official ரிலீஸ் தேதி வந்தாச்சு..

தொடர்புடைய இணைப்புகள்

Rajinikanth jailer movie shooting update deets

People looking for online information on Jailer, Jailer Movie Shooting Update, Rajinikanth will find this news story useful.