100 கலைஞர்களுடன் நடனம் ஆடி அசத்திய லெஜண்ட் சரவணன் - விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 20, 2019 12:21 PM
சென்னையின் பிரபல ஜவுளிக்கடையான தி லெஜண்ட் சரவாணா ஸ்டோர்சின் உரிமையாளர் சரவணன் அருள். தன் கடை விளம்பரத்துக்காக அவரே நடித்திருந்த விளம்பரங்கள் பெரிய அளவில் பிரபலம் அடைந்தன.

இதைத் தொடர்ந்து இவர் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. அதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயந்தாரா, ஹன்ஷிகா மோத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இவர் சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கும் ’புரடக்ஷன் நம்பர் 1’ திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ஜேடி-ஜெரி கூட்டணி இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தில் இருந்து புதிய எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
’புரடக்ஷன் நம்பர் 1’ படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்ட பிரம்மாண்ட பாடல் காட்சியில் புகைப்படமான அதில் லெஜண்ட் அருள், நாயகி கீத்திகா திவாரியுடன் தோன்றுகிறார். சுமர் 10 கோடி ரூபாய் செலவில் உருவான அரண்மனை போன்ற பிரம்மாண்ட அரங்கில் நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்களுடன் இந்த பாடல் காட்சி உருவாக்கப் பட்டுள்ளது.