www.garudabazaar.com

அஜித் பட தயாரிப்பாளருடன் 'அல்போன்ஸ் புத்திரன்.. அடுத்த படம் குறித்து வெளியான அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், தமது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Alphonse Puthren New film with Ajith Kumar Movies Producer

Images are subject to © copyright to their respective owners.

Also Read | கையிலே ஆகாசம்.. விமான பயணத்தில் ரஜினியுடன் ‘சூரரைப்போற்று’ நாயகி.. வைரல் ஃபோட்டோ!   

தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியான “நேரம்” என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்.

2015 ஆம் ஆண்டு வெளியாகி மலையாள திரையுலகில் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்த ‘பிரேமம்’ படத்தை  அல்போன்ஸ் புத்ரன் இரண்டாவது படமாக இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக, சாய்பல்லவி, மடோனா செபாஸ்டியன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார்.

Alphonse Puthren New film with Ajith Kumar Movies Producer

Images are subject to © copyright to their respective owners.

அல்போன்ஸ் புத்ரன் பிரேமம் படத்தை தொடர்ந்து 7 வருடங்களுக்குப் பிறகு  கோல்டு படத்தை இயக்கினார்.

இந்த படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோருடன் படத்தில் நடித்த 40க்கும்  மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்தனர். குறிப்பாக, மல்லிகா சுகுமாரன், லால் அலெக்ஸ், ஜெகதீஷ்,  பாபு ராஜ், வினய் ஃபோர்ட் என ஏராளமான நடிகர்கள் Gold படத்தில் நடித்தனர்.

Alphonse Puthren New film with Ajith Kumar Movies Producer

Images are subject to © copyright to their respective owners.

கோல்ட் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பின்னர் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பதிவை பதிவிட்டு தமது புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

Alphonse Puthren New film with Ajith Kumar Movies Producer

Images are subject to © copyright to their respective owners.

விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களின் இணை தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் புதிய படத்தை இயக்க அல்போன்ஸ் புத்திரன் ஒப்பந்தமாகி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ளார்.

Also Read | LEO ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் கனகராஜூடன் யூடியூபர் இர்பான்.. வைரல் பதிவு!

Alphonse Puthren New film with Ajith Kumar Movies Producer

People looking for online information on Alphonse Putharen, Alphonse Puthren New film will find this news story useful.