'அடிங்... அதான் சார் Password..'- சந்தானம் நடித்துள்ள ‘A1’ படத்தின் Sneak Peek வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தில்லுக்கு துட்டு 2’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘A1' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

Santhanam's A1 film sneak peek video has been released

‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் 2வது சீசன் வெற்றியாளரான ஜான்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும்  A1 திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ள தாரா அலிஷா நடிக்கிறார். இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கோபி ஜெகதீசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சர்க்கிள் பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ள இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் வரும் ஜூலை.26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானத்தின் வழக்கமான காமெடி டைமிங் வசனங்கள் கொண்ட இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது. இது தவிர சந்தானத்தின் நடிப்பில் ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’ உள்ளிட்ட திரைப்படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

'அடிங்... அதான் சார் PASSWORD..'- சந்தானம் நடித்துள்ள ‘A1’ படத்தின் SNEAK PEEK வீடியோ இதோ வீடியோ