கிச்சுகிச்சு மூட்டியா சிரிக்க வைக்க முடியும்….! சந்தானம் பளார் பேச்சு வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 24, 2019 10:16 AM
என்ன பேசினாலும் பிரச்சனை பண்ணா எப்படி காமெடி பண்ண முடியும் என நடிகர் சந்தானம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளைய இயக்குரில் பங்கேற்ற இயக்குநர் ஜான்சன் இயக்கியிருக்கும் படம் அக்யூஸ்ட் நம்பர் ஒன். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானம் ,எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிராமின் வீட்டு பெண்னை லோக்கல் பையன் ஒருவர் காதலிப்பதே படத்தின் கதை.
இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சந்தானம் காமெடிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பேசினார்.
பாலிவுட் ஹாலிவுட் படங்களில் எல்லாம் தன் இஷ்டத்துக்கு காமெடி செய்கிறார்கள். தமிழ் சினிமாவில், தான் ஏதாவது ஒன்று பேசினாலே அதை மீடியாக்கள் பெரிதாக்கி பிரச்சனை செய்துவிடுகின்றனர்
தமிழ் சினிமாவை பொருத்த வரை காமெடிக்கு பெரும் போட்டி உள்ளது. ஆனால் காமெடிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. என்ன பேசினாலும் செய்தாலும் அது பிரச்சனையாகி விடுகிறது
இப்படி இருந்தால் எப்படி காமெடி செய்ய முடியும்? சிரிக்க வையுங்கள் சிரிக்க வையுங்கள் என்றால், எதுவும் பேசாமால் செய்யாமல் எப்படி சிரிக்க வைக்க முடியும்? தியேட்டரில் போய் உட்கார்ந்து படம் பார்ப்பவர்களின் அக்கிளில் கையை விட்டு கிச்சுகிச்சு செய்துதான் சிரிக்க வைக்க முடியும்.
வேலையில்லாதவர்கள் ஏதாவது குறையை கண்டுபிடித்து கூறுவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கமெடியை பார்த்து கேட்டு ரசிக்க வேண்டடும், கமெடிக்கு ரெஸ்ட்ரிக்ஷன் போட்டால் சிரிக்க வைப்பது கடினம். இவ்வாறு நடிகர் சந்தானம் தெரிவித்தார்..
கிச்சுகிச்சு மூட்டியா சிரிக்க வைக்க முடியும்….! சந்தானம் பளார் பேச்சு வீடியோ இதோ வீடியோ